சிம்பு மட்டும் சரியா இருந்திருந்தால் விஜய்யை காலி பண்ணியிருப்பாரு - போட்டு உடைத்த பிரபலம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறுத்து, தவெகவின் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்ட பின்னரும் பஞ்சாயத்து இன்னும் ஓய்ந்த பாடில்லை. அதாவது இயக்குநர் பிரவீன் காந்தி செய்தி நிறுவனம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் மிகவும் காட்டமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக கட்சியினரை விமர்சித்தார்.
அவர் பேசுகையில், " சூப்பர் ஸ்டாரை சூடாக்கி பார்க்க நினைக்கிறார்கள். நான்கு தலைமுறைகளாக சூப்பர் ஸ்டாரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உலகம் முழுவதும் உள்ளனர். ஆதவ் அர்ஜுனாவை எத்தனை ஆண்டுகளாகத் தெரியும்? விசிகவில் இருந்தார் தற்போது தவெகவில் இருக்கிறார். விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அனைவருடனும் பிரச்னையை உருவாக்கி வைத்துள்ளார்கள்.

பஞ்சாயத்து: சீமான் உட்பட அனைவரையும் எதிர்த்து உள்ளீர்கள், யாராவது ஒருவருடனாவது நட்பு ரீதியாக உள்ளீர்களா? உங்களை நம்பி எப்படி மக்கள் ஓட்டு போடுவார்கள். எல்லோரிடமும் வம்பு வளர்த்துக் கொண்டு இருந்தால், விஜய் அரசியல் வேலைகளைச் செய்வாரா இல்லை? பஞ்சாயத்து பேசிக் கொண்டு இருப்பாரா? விஜய் உடன் இருக்கும் நபர்கள் சரியான நபர்களாக இருக்க வேண்டாமா? ரஜினி இப்போது உங்களை என்ன செய்தார்? நீங்கள் எதற்காக ரஜினியை இழுக்குறீர்கள்?
விஜய்க்கு ரோல் மாடல்: நீங்கள் ரோல்மாடலாக விஜய்யை நினைக்கிறீர்கள் அல்லவா? அந்த விஜய்க்கு ரோல்மாடல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆதவ் அர்ஜுனா எப்போது வந்தார்? அந்த பெயர் எத்தனை நாட்களாகத் தெரியும்? லாட்டரி டிக்கெட் மார்டின் இருந்ததால் அந்த பெயர் தெரிகிறது. விசிகவில் இணைந்ததால் ஆதவ் அர்ஜுனா பெயர் தெரிந்தது. தற்போது தவெகவில் இருப்பதால் ஆதவ் அர்ஜுனா பெயர் தெரிகிறது. நான் எல்லாம் பிறந்ததில் இருந்து ரஜினி ரசிகர், நான்கு தலைமுறைகளாக அவரைப் பாராட்டிக் கொண்டு இருக்கிறோம். போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் ரஜினியை விமர்சித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? சீமான் பேசியதற்கு எல்லாம் பதிலடி நாங்கள் கொடுத்துள்ளோம்.

சிம்பு: ரஜினியை உசுருக்கு உசுரா நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். நாளை ஒரு சிக்னல் அவர் கொடுத்தால் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் எதிராக ரஜினி ரசிகர்கள் நிற்பார்கள்" என்று காட்டமாக பேசினார். அதேபோல், சிம்பு மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் விஜய்யை ஓரம் கட்டியிருப்பாரு" என்று தெரிவித்தார். அவரது இந்த காட்டமான விமர்சனம் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











