வெங்கட்பிரபுவின் ‘மன்மத லீலை‘… சிம்பு வெளியிடும் மாஸ் அப்டேட் !

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மத லீலை படத்தின் முக்கியமான அப்பேட் வெளியாக உள்ளது.

அந்த அப்டேட்டை சிம்பு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிட உள்ளதாக வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெங்கட்பிரபுவின் 10வது படமாக உருவாக உள்ள இப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் தயாரிக்கப்பட உள்ளது.

மாநாடு

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் கடந்த நவ.25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

டைம் லூப்

டைம் லூப்

டைம் டிராவல் திரைப்படத்தை பார்த்து பழகிய நமக்கு டைம் லூப் திரைப்படம் புதுமையாக இருந்தது. இயக்குநர் கையில் எடுக்கத் தயங்கும் டைம் லூப் திரைப்படத்தை கொடுத்து பெரும் பாராட்டை பெற்றார் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மன்மத லீலை

மன்மத லீலை

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படத்திற்கு மன்மத லீலை எனன தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிளிம்ப்ஸ்

கிளிம்ப்ஸ்

இந்நிலையில், மன்மதலீலை திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் ஒரு சின்ன கிளிம்ப்ஸ் வீடியோவை இன்று மாலை 6.30 மணிக்கு சிம்பு வெளியிடுவார் என பதிவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது. வெங்கட்பிரபுவின் 10வது படமாக உருவாக உள்ள இப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் தயாரிக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X