மாநாடு வேற லெவல் விஷூவல்ஸ்... சிம்பு ராக்கிங்... வாவ் எஸ்ஜே சூர்யா... மாநாடு நடிகர் பாராட்டு
சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, எஸ்ஜே சூர்யா, பிரேம்ஜி, உதயா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம்.
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் உதயா படத்தின் விஷூவல்ஸ், நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பு குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கம்
நடிகர்கள் சிம்பு, எஸ்ஜே சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, உதயா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது மாநாடு படம். படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு டைரக்ட் செய்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

விரைவில் ரிலீஸ்
இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தில் எஸ்ஏ சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் உதயா பாராட்டு
இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள படத்தின் நடிகர்களில் ஒருவரான உதயா, படத்தின் விஷூவல்கள் வேற லெவலில் உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். படத்தை விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாகவும் கூறியுள்ளார்.
Recommended Video

வாவ் எஸ்ஜே சூர்யா
மேலும் சிம்பு ராக்கிங் என்றும் வாவ் எஸ்ஜே சூர்யா என்றும் தெரிவித்துள்ளார். தன்னுடைய நண்பர் வெங்கட் பிரபுவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை முதலாளி என்று குறிப்பிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, உதயாவிற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











