கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாள் ஸ்பெஷல்...'மாநாடு' புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை : நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கல்யாணி பிரியதர்ஷனின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக 'மாநாடு' படக்குழுவினர், கல்யாணி இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 'மாநாடு' படத்தில் ஹீரோயினாக நடிக்கும் கல்யாணியின் ஃபோட்டோ தனி போஸ்டராக வெளியிடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்து வருகிறது.

வைரலாகும் புதிய போஸ்டர்

வைரலாகும் புதிய போஸ்டர்

இந்த புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செம க்யூட்டான எக்ஸ்பிரஷனுடன் கல்யாணி தோன்றும் இந்த போஸ்டர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. இந்த புதிய போஸ்டருக்கு லைக்குகள் குவிந்து வருவதுடன், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கல்யாணியின் கேரக்டர் பெயரும் வெளியீடு

கல்யாணியின் பிறந்தநாளை முன்னிட்டு, மற்றொரு சர்ப்ரைஸாக இப்படத்தில் கல்யாணியின் கேரக்டர் பற்றிய சுவாரஸ்யமான தகவலையும் டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் சீதா லட்சுமி என்ற கேரக்டரில் தான் கல்யாணி நடித்துள்ளாராம். சிம்பு, அப்துல் காலிஹ் என்ற இஸ்லாமிய இளைஞர் கேரக்டரில் நடித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் வாழ்த்து

வெங்கட் பிரபுவின் வாழ்த்து

ட்விட்டரில் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "வெரி வெரி ஹேப்பி பர்த்டே சீதா லட்சுமி என்ற கல்யாணி பிரியன். காட் பிலெஸ் கல்யாணி" என குறிப்பிட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன் தான் 'மாநாடு' சூட்டிங் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதாக வெங்கட் பிரபு ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாநாடு

இன்னும் சில நாட்கள் மட்டுமே சூட்டிங் மீதம் உள்ளதாம். அத்துடன் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிய உள்ளதாம். அரசியல், ஆக்ஷன் கலந்த இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஆண்டு இறுதியில் ரிலீஸ்

ஆண்டு இறுதியில் ரிலீஸ்

இந்த படம் சிம்புவை மாறுபட்ட கோணத்தில் காட்டும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, டேனியல் அன்னி போப் உள்ளிட்ட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் பலர் இதில் நடித்துள்ளனர். எஸ்.ஜே.சூர்யா, போலீஸ் அதிகாரி கேரக்டரில், வில்லனாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X