சிம்புவின் பத்து தல முதல் காட்சி ரத்து…அதிர்ச்சியில் ரசிகர்கள்.. ஏன் என்னாச்சு!

சென்னை : நடிகர் சிம்புவின் பத்து தல திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மாநாடு,வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த சிம்புவின் நடிப்பில் பத்து தல திரைப்படம் உருவாகி உள்ளது.

முதலில் இப்படத்தை நார்தன் இயக்கிய நிலையில், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் விலகியதை அடுத்து கிருஷ்ணா இப்படத்தை இயக்கினார்.

சிம்புவின் பத்து தல

சிம்புவின் பத்து தல

வெந்து தணிந்தது காடு படத்திற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து அந்த படத்தில் இருபது வயது இளைஞர் போல வந்து இதுவரை அவர் மீது இருந்த அனைத்து நெகட்டிவ் தாட்டுகளையும் உடைத்தார். மும்பை கேங்ஸ்டர் கதை அம்சத்தைக் கொண்ட இத்திரைப்படம் சிம்புவிற்கு வெற்றிப்படமாக அமைந்தது.

பத்து தல படத்தின் கதை

பத்து தல படத்தின் கதை

வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு பத்து தல படத்திற்காக அதிரடியாக எடையை கூட்டினார். இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் அனைவரும் மிரட்டுபோகும் வில்லனாக நடித்துள்ளார். சிம்புவை கையும் களவுமாக பொறிவைத்து பிடிக்க போலீசான கௌதம் கார்த்திக் அந்த கேங்கில் சேர்ந்து, சிம்புவிற்கு எதிரான ஆவணங்களை திரட்டி போலீசில் ஒப்படைத்து விடுகிறார். இறுதியில் சிம்புவிற்கு என்ன ஆனது என்பதுதான் பத்து தல படத்தின் கதை.

கன்னடத்தில் ஹிட்

கன்னடத்தில் ஹிட்

ஏற்கனவே கன்னடத்தில் வெளியாகி வெற்றி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம் என்பதால், இப்படதின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க அனைத்து பாடல்களும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளன. இப்படத்தில் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல் காட்சி ரத்து

முதல் காட்சி ரத்து

பத்து தல திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் காட்சியான அதிகாலை 4 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பத்து தல படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் வெளியான போது பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. அதனை தடுக்கும் விதமாக திரையரங்குகளில் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X