கையில் துப்பாக்கி… ரத்தகாயத்துடன் சிம்பு.. வெந்துதணிந்த காடு மாஸ் அப்டேட்!

சென்னை : வெந்துதணிந்த காடு திரைப்படம் குறித்த சூப்பரான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

கெளதம் மேனன் சிம்பு, கூட்டணி என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளதால்,இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இத்திரைப்படத்தில், சிம்புக்கு ஜோடியாக சித்தி இத்னானியும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளனர்.

சிம்பு

சிம்பு

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் சிம்புவிற்கு கம்பேக் படமாகவே அமைந்தது. ஹாலிவுட் படத்தைப்போல, இப்படத்திலும் வித்தியாசமான முறையில் டைம் லூப் முறையில் படம் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்பு, கெளதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக கௌதம் மேனனுடன் இணைந்துள்ளார் சிம்பு. சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

மாஸ் அப்டேட்

மாஸ் அப்டேட்

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், சிம்பு முகத்தில் ரத்தகாயங்களுடன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கெளதம் மேனன் சிம்பு, ரஹ்மான் கூட்டணி என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Recommended Video

Akila Exclusive | Simbu முதல் Vijayakanth வரை நான்தான் தங்கச்சி | Filmibeat Tamil
சிம்பு பிஸி

சிம்பு பிஸி

வெந்து தணிந்தது காடு படத்தை வரும் ஜூன் மாதம் படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. மேலும், இயக்குநர் ராம் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X