twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெந்து தணிந்தது காடு சென்சார் தகவல்..இந்த படத்திற்கு சென்சார் கொடுத்த சிறப்பு என்ன தெரியுமா?

    |

    சென்னை : சிம்புவின் தணிந்தது காடு படத்திற்கு தணிக்கைக்குழு மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கூட்டணியான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சிலம்பரசன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் வெற்றிப்பயணத்தில் மூன்றாவது படமாக உருவாகி உள்ள படம் வெந்து தணிந்தது காடு.

    சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் குஜராத்தி நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

    உடல் எடையை குறைத்து

    உடல் எடையை குறைத்து

    இந்த படத்தில் சிம்பு உடலை குறைத்து 21 வயது இளைஞனாக மாறியிருந்தார். அண்மையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் கூட, சிம்பு இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் என்றார். இந்த படத்தில் இன்டர்வல் ப்ளாகில் சிங்கிள் ஷாட் ஃபைட் இருக்கு அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளது என கூறியிருந்தார்.

    டிரைலர்

    டிரைலர்

    இத்திரைப்படத்தின் டிரைலருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில்,டிரைலரின் ஆரம்பத்தில், கௌதம் மேனனின் மிரட்டலான குரலில், சில சமயம் உண்மையை சொல்வது கதை சொல்வதைவிட கஷ்டம்..இது ஒரு உண்மையான மனுஷனோட வாழ்க்கை என்று ஏ.ஆர் ரஹ்மானில் பின்னணி இசையில் டிரைலர் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளது.

    எழுத்தாளர் ஜெயமோகன்

    எழுத்தாளர் ஜெயமோகன்

    எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது உள்ளது. மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், பாலா உள்ளிட்ட முதன்மை இயக்குனர்களின் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ள எழுத்தாளர் ஜெயமோகன் முதன்முறையாக கௌதம் மேனனுடன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இணைகிறார்.

    ரன்னிங் டைம்

    ரன்னிங் டைம்

    இந்நிலையில் இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. அதோடு இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரமாக உள்ளது. செப்டம்பர் 15ந் தேதி திரையில் இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் இப்போதே முன்பதிவை தொடங்கிவிட்டனர்.

    English summary
    Vendhu Thanindhathu Kaadu’s release, Silambarasan opens up about teaming up with Gautham Menon, drastic weight loss for the film. Vendhu Thanindhathu Kaadu movie censor and running time information
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X