சிம்புவின் STR 48 படத்தின் மாஸ் அப்டேட்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

சென்னை : சிம்பு நடிப்பில் உருவாக உள்ள STR 48 படம் குறித்த புது அப்டேட் வெளியாகியுள்ளது.

மாநாடு, வெந்துதணிந்தது காடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் கணிசமாக அதிகரித்துள்ளது.

Silambarasan STR 48 movie mass updates

அண்மையில் சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியானது.

பத்து தல : 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஸ்டுடியோ கிரின் ஞானவேல் ராஜா சிம்பு, கௌதம் கார்த்தியை வைத்து பத்து தல என்ற திரைப்படத்தை எடுத்தார். மாநாடு படத்திற்காக உடல் எடையை குறைத்த சிம்பு இந்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரித்தார்.

தேசிங்கு பெரியசாமி : இதையடுத்து, சிம்புவின் 48 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார். கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

சிம்பு 48 : மேலும்,சிம்புவின் 48வது படத்தை சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க ராஜ் கமல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்காக தயார் செய்த கதை இது என்றும், ரஜினி நடிக்க முடியாமல் போனதால், சிம்புவை வைத்து அப்படத்தை எடுக்க தேசிங்கு பெரியசாமி முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

சிம்புக்கு ஜோடி : இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் தீபிகா படுகோனேயை இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்கவைக்க இயக்குனர் தேசிங்கு பெரியசாமி திட்டமிட்டுள்ளதாகவும், அண்மையில் அவர் தீபிகாவை வந்தித்து படத்தின் கதையை கூறியதாக தெரிகிறது. கதை பிடித்திருப்பதாலும், சிம்பு படம் என்பதால் அவர் விரைவில் இந்த படத்தில் இணைவார் என கூறப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு : இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளதாகவும், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சினிமாவில் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X