Don't Miss!
- News
ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்
- Finance
18 வயதில் கோடீஸ்வரர், 22 வயதில் ஜீரோ... ஆனாலும் மனம் தளராத இளைஞர்!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும்...
- Automobiles
ஆக்டிவா 6ஜி ஸ்பெஷல் எடிசனை முழுமையாக காட்சிப்படுத்திய ஹோண்டா... செம்ம அழகா இருக்கு... நமக்கே வாங்க தோனுது!
- Sports
சக வீரர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த ஷிகர் தவான்.. முதல் குறியே கேஎல் ராகுல்.. கேப்டன் பதவியால் கோபம்?
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
நடிகர் சிம்புவின் 'பத்துதல' ரிலீஸ் எப்போது?.. சுடசுட வெளியான தகவல்!
சென்னை : நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாக தனது திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் அடுத்தடுத்து தொடர்ந்து திரைப்படங்களை நடித்து வருகிறார் சிம்பு.
கடந்தாண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம். சிம்புக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது மட்டுமில்லாமல், அவருக்கு கம்பேக் கொடுக்கும் படமாக அமைந்தது.
டிஆர்.,ஆ
இது?...என்ன
இப்படி
ஆள்
அடையாளமே
தெரியாம
மாறிட்டார்...சிம்பு
வெளியிட்ட
லேட்டஸ்ட்
போட்டோ

பத்து தல
கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக், கெளதம் மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையில்
முதன்முறையாக கௌதம் கார்த்திக், சிம்பு இணையும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்று வசூலை வாரிக்குவித்த முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இறுதிகட்ட படப்பிடிப்பு
இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்பு தற்போது தன் தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக அவரோடு அமெரிக்கா சென்றுள்ளார். அதனால் பத்து தல படத்தின் படப்பிடிப்பில் சிம்புவால் கலந்து கொள்ளமுடியவில்லை. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கி 45 நாள் தொடர்ந்து நடத்தி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படமாகவுள்ளதாகவும், சிம்பு இதில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரிலீஸ் தேதி
இந்நிலையில் பத்துதல திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ஸ்டூடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பத்துதல திரைப்படம் டிசம்பர் மாதம்14ந் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.. மேலும், வெந்து தணிந்தது காடு திரைப்படமும் செப்டம்பர் 15ந் தேதி வெளியாக உள்ளதால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.