ஹன்சிகா மோத்வானியின் 50வது படம்.. மாலிக்காக மிரட்டும் சிம்பு.. தெறிக்கும் மஹா டீசர்!
சென்னை: நடிகர் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகி உள்ள மஹா படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஜமீல் இந்த படத்திற்கு எதிராக அண்மையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
படத்தின் சில காட்சிகளை அவர் அனுமதியின்றி தயாரிப்பாளர் உதவி இயக்குநர்களை வைத்து இயக்கி விட்டார் என புகார் அளித்திருந்தார்.

பிரச்சனை முடிந்தது
சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள மஹா படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என்றும் படத்தின் சில காட்சிகளை தனக்கே தெரியாமல் எடுத்துள்ளனர் என்றும் இயக்குநர் தொடர்ந்த வழக்கு சமரசம் செய்யப்பட்டு பிரச்சனை செட்டில்மென்ட் ஆகி உள்ளது.

50வது படம்
நடிகை ஹன்சிகா நடிப்பில் 50வது படமாக மஹா உருவாகி இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் காட்டிய அளவுக்கு தற்போது வெளியாகி உள்ள டீசர் இல்லை. மீண்டும் ஒரு குழந்தை கடத்தல் படமாகவே இந்த படம் உருவாகி இருப்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

நட்புக்காக சிம்பு
வாலு படத்திற்கு பிறகு பிரிந்த இருவரும் மீண்டும் இந்த படத்திற்காக ஜோடி சேர்ந்துள்ளனர். மாலிக் எனும் விமான ஓட்டி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் சிம்பு. சிம்பு இந்த படத்தில் நட்புக்காக மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஸ்ரீகாந்த் போலீஸ் அதிகாரியாக கலக்கி உள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு நன்றி
மான் கராத்தே படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சிவகார்த்திகேயன் ஹன்சிகாவின் மஹா டீசரை தற்போது வெளியிட்டுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நன்றி கூறியுள்ளார்.
குழந்தை கடத்தல்
மறுபடியும் ஒரு குழந்தை கடத்தல் படமாகவே மஹா உருவாகி இருப்பது டீசரிலேயே தெரிகிறது. தனது குடும்பத்தையும் குழந்தையையும் காப்பாற்ற போராடும் பெண்ணாக நடிகை ஹன்சிகா இந்த படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உருவாகி உள்ள ஹன்சிகா படம் ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











