நேத்து ஆரம்பிச்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா? 'ஈஸ்வரன்' டப்பிங்கை முடித்த சிம்பு

By

சென்னை: ஈஸ்வரன் படத்தின் டப்பிங்கையும் முடித்துவிட்டதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு இப்போது நடிக்கும் படம், ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது.

திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

உடல் எடை

உடல் எடை

இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார், சிம்பு.

ஒரு கிராம் தங்கம்

ஒரு கிராம் தங்கம்

அதாவது தீபாவளி பரிசாக, ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளார். மேலும், தன்னுடன் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கி இருக்கிறார். சிம்புவின் இந்தத் திடீர் பரிசால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

டப்பிங்கை முடித்தார்

டப்பிங்கை முடித்தார்

ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணியை தொடர்ந்தார் சிம்பு. அதையும் முடித்துவிட்டதாக நடிகர் சிம்பு இப்போது தெரிவித்துள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் அவர் பங்கேற்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X