புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் ஆட்டம் போட்ட சிம்பு.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ!

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் நடிகர் சிலம்பரசன் ஆடிப் பாடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக ஆண்டு தோறும் செப்டம்பர் 22ம் தேதி 'Rose Day' கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ரோஸ் டே விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு குழந்தைகளுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்துள்ளார்.

ஸ்லிம் சிம்பு

ஸ்லிம் சிம்பு

அலை படத்தில் பார்த்தது போல நடிகர் சிம்பு மீண்டும் அப்படியொரு தோற்றத்திற்கு தன்னை மாற்றி ரசிகர்களை ஆச்சர்யத்தில் அட போட வைத்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்திற்காக இப்படியொரு லுக்கிற்கு மாறி உள்ள சிம்புவை பார்த்து பலரும் வாய் பிளந்து பாராட்டி வருகின்றனர்.

பாசிட்டிவிட்டியை பரப்பும் சிம்பு

பாசிட்டிவிட்டியை பரப்பும் சிம்பு

ஈஸ்வரன் பட இசை வெளியீட்டு விழாவிலே நடிகர் சிம்பு பாசிட்டிவிட்டி குறித்து சிறப்பான ஸ்பீச் ஒன்றை கொடுத்திருந்தார். தொடர்ந்து, நடிகர் சிம்புவின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறி ஒரே பாசிட்டிவிட்டியாக பரப்பி வருகிறார். சிம்புவின் ரசிகர்கள் தற்போது மிகவும் பெருமையுடன் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு எங்க தலைவன் திரும்பி வந்துட்டான் டா என சொல்லி வருகின்றனர்.

தீபாவளிக்கு மாநாடு

தீபாவளிக்கு மாநாடு

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ளார். மேலும், எஸ்.ஏ. சந்திரசேகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரஜினியுடன் போட்டி

ரஜினியுடன் போட்டி

முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்பது போல மாநாடு படத்தை தைரியமாக தீபாவளிக்கு வெளியிட நடிகர் சிம்பு முடிவெடுத்துள்ளார். தீபாவளியன்று ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இரு படங்களுக்கு இடையே போட்டி எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன்

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன்

இந்நிலையில், நடிகர் சிம்பு நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஆடிப் பாடி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆண்டு தோறும் ரோஸ் டே எனும் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டே தன்னை அழைத்ததாகவும் தன்னால் வர முடியாத சூழல் இருந்ததால் இந்த ஆண்டு இந்த ரோஸ் டேவில் கலந்து கொண்டதாகவும் சிம்பு அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

ஐ எம் எ லிட்டில் ஸ்டார்

சம்சார சங்கீதம் படத்தில் இடம்பெற்ற "ஐ எம் எ லிட்டில் ஸ்டார்.. ஆவேனா சூப்பர் ஸ்டார்" எனும் பாடல் அந்த நிகழ்ச்சியில் ஒலிக்க புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் நடிகர் சிம்பு குழந்தையாகவே மாறி ஆடிப் பாடி அவர்களை மகிழ்வித்த வீடியோ சிம்பு ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. என்ன மனசுய்யா உங்களுக்கு என பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த மனசு இருக்கே

அந்த மனசு இருக்கே

மேலும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஏகப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களும் சிம்புவின் நல்ல மனதையும் பாசிட்டிவ் எனர்ஜியையும் பார்த்து பாராட்டி வருகின்றனர். மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் என சிம்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X