மாஸ்டர் பொங்கலா? தாண்டவப் பொங்கலா? விஜய்யுடன் மோதும் சிம்பு.. ஈஸ்வரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி ரிலீசாகிறது.

தற்போது ஈஸ்வரன் படத்துக்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் மோதவுள்ளன.

தாண்டவப் பொங்கல்

தாண்டவப் பொங்கல்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ள ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது. ஈஸ்வரன் திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகை தாண்டவப் பொங்கலாக இருக்கப் போகிறது.

மாஸ்டர் பொங்கல்

மாஸ்டர் பொங்கல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வருகிறது. மாஸ்டர் திரைப்படம் வெளியாக விருப்பதால், தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் தினமும் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யுடன் மோதும் சிம்பு

விஜய்யுடன் மோதும் சிம்பு

பொங்கல் பண்டிகை என்பதால், அந்த கலெக்‌ஷனை அள்ள சிம்புவும் களத்தில் குதித்துள்ளார். தளபதி விஜய்யுடன் சிம்பு மோத உள்ள நிலையில், இந்த போட்டி எப்படி இருக்கும், யாருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என சினிமா நிபுணர்கள் கணித்து வருகின்றனர். இரு படங்களும் நல்ல வசூலை ஈட்டும் என்றே கூறப்படுகிறது. பார்க்கலாம்.

ஈஸ்வரன் பாடல்கள்

ஈஸ்வரன் பாடல்கள்

ஈஸ்வரன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், அடுத்ததாக வரும் ஜனவரி 2ம் தேதி சிம்புவின் ஈஸ்வரன் திரைப்பட பாடல்கள் வெளியாகும் என்றும் ஈர்ஸ்வரன் படத்தின் நாயகி நிதி அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷமாக ட்வீட் போட்டுள்ளார்.

Recommended Video

Silambarasan TR playing dual roles in Maanaadu? | FilmiBeat Tamil
தியேட்டர்கள் மீளுமா

தியேட்டர்கள் மீளுமா

சிம்பு மற்றும் விஜய் படங்கள் மோதல் என்று பார்ப்பதை விட இந்த பொங்கல் பண்டிகை முதல் சினிமா தியேட்டர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்றே பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மாஸ்டர், ஈஸ்வரன் படங்களை தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X