வெந்து தணிந்தது காடு.. நயன்தாரா சகோதரிக்கு வாழ்த்தை போடு.. சிம்புவின் தீவிர ரசிகரின் வாழ்த்து!

சென்னை: மகாபலிபுரத்தின் கடற்கரையை ஒட்டி பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற போகும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

CoolSuresh Wishes | வெந்து தணிந்தது காடு Nayan-Wikki-க்கு திருமணவாழ்த்து பாடு

தந்தை டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் உள்ள நிலையில், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ள நடிகர் சிம்பு இந்த திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அவரது தீவிர ரசிகர் நயன்தாராவின் திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி போட்டுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சிம்புவுடன் காதல்

சிம்புவுடன் காதல்

வல்லவன் படத்தை சிம்பு இயக்கி நடித்து வந்த நிலையில், அவருடன் நடிகை நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிப் டு லிப் அடிக்கும் புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் கசிந்து மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பின. இருவரது காதலும் திருமணத்தில் முடியும் என எதிர்பார்த்த ர்சிகர்களுக்கு திடீரென இருவரும் பிரேக்கப் செய்து கொன்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் சிம்புவுடன் இணைந்து

மீண்டும் சிம்புவுடன் இணைந்து

நயன்தாரா மற்றும் சிம்பு அதன் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என ரசிகர்கள் இருவரையும் எதிரிகளாகவே கருதி வந்தனர். ஆனால், அதை உடைக்கும் அளவுக்கு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இது நம்ம ஆளு திரைப்படத்தில் சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்து தங்களது நட்பை வெளிப்படுத்தினர்.

விக்னேஷ் சிவனின் முதல் ஹீரோ

விக்னேஷ் சிவனின் முதல் ஹீரோ

கடந்த 2012ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அவர் இயக்கிய முதல் படத்தின் நாயகனே சிம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் திருமணத்தில் சிம்பு கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

சிம்பு வரமாட்டார்

சிம்பு வரமாட்டார்

ஆனால், தந்தை டி ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள சிம்பு நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சிம்புவின் தீவிர ரசிகரும் நடிகருமான கூல் சுரேஷ் நயன்தாராவின் திருமணத்துக்கு வாழ்த்து சொல்லி போட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

சகோதரி நயன்தாரா

சகோதரி நயன்தாரா

புதிய படங்கள் ரிலீஸ் ஆனாலே முதல் ஆளாக படத்தை பார்த்து தனது விமர்சனத்தை முன் வைத்து வரும் நடிகர் கூல் சுரேஷ் தனது வீடியோவில் சகோதரி நயன்தாரவின் திருமணத்துக்கு வர இயலவில்லை என்றும் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளேன் என்றும் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வணக்கத்தை போடு

வணக்கத்தை போடு

வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட் வந்ததில் இருந்தே அந்த படத்தின் தலைப்பை பல இடங்களில் பலவிதமாக குறிப்பிட்டு கலகலப்பாக பேசி வரும் கூல் சுரேஷ், "வெந்து தணிந்தது காடு.. விக்னேஷ் சிவன், நயன்தாராவுக்கு வணக்கத்தை போடு" என பேசி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X