'ஈஸ்வரன்' டீமுக்கு அசத்தல் சர்பிரைஸ் கொடுத்த நடிகர் சிம்பு.. மகிழ்ச்சியில் நன்றி சொன்ன படக்குழு!
சென்னை: ஈஸ்வரன் படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவுக்கும் சர்பிரைஸ் கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார், நடிகர் சிம்பு.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம், ஈஸ்வரன். இதன் படப்பிடிப்பு நவம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்தது.
தொடர்ந்து 40 நாட்கள் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்தி முடித்துள்ளனர்.

நிதி அகர்வால்
கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். நந்திதா ஸ்வேதா, பால சரவணன் உள்பட பலர் நடிக்கின்றனர். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

ஸ்லிம் சிம்பு
ஜீரோ, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

சர்பிரைஸ் தீபாவளி
இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததும், படத்தில் பணியாற்றிய 400 பேருக்கும் சர்பிரைஸ் கொடுத்திருக்கிறார், சிம்பு. அதாவது தீபாவளி பரிசாக, ஒரு கிராம் தங்கம், வேட்டி சேலை, இனிப்புகள் என தீபாவளி பரிசுகளை வழங்கியுள்ளார்.

வேட்டி சேலை
மேலும், தன்னுடன் நடித்த துணை நடிகர்கள் 200 பேருக்கு வேட்டி சேலை, இனிப்புகள் வழங்கி இருக்கிறார். சிம்புவின் இந்தத் திடீர் பரிசால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்தனர். ஈஸ்வரன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











