Just In
- 2 hrs ago
தளபதி65 படத்தில்நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 2 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 3 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 3 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- Sports
கிறிஸ் லின்னுக்கு பதிலா டீ காக்கை களமிறங்கிய ரோகித்... சொதப்பிய டீ காக்... தவறான முடிவால் அவதி
- News
ஸ்கூட்டரில் இவிஎம் மெஷின்.. வேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் ஏப்ரல் 17-ல் மறுவாக்குப்பதிவு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Lifestyle
சூரிய பெயர்ச்சி: மேஷம் செல்லும் சூரியனால் இந்த 7 ராசிக்கு அட்டகாசமான காலமா இருக்கப் போகுது...
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு.. ஜெய் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு கேக் ஊட்டி அசத்தல்!
சென்னை: தமிழ்நாடே நேற்று தேர்தல் பிசியில் இருந்த நிலையில், நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சர்ப்ரைஸாக கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளார் நடிகர் சிம்பு.
பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஜெய்.
ஹீரோவாக ஏகப்பட்ட படங்களில் கலக்கி வரும் ஜெய், நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜெய்க்கு பர்த்டே
1984ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தேனியில் பிறந்த நடிகர் ஜெய் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். 16 வயதில் தளபதி விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஜெய் ஹீரோவாக ஏகப்பட்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

செம ஹிட்
நடிகர் ஜெய்க்கு அவரது சினிமா பயணத்தில் சில படங்கள் செம ஹிட் கொடுத்துள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்திலேயே ஜெய்யின் கதாபாத்திரம் அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கிய கோவா, சரோஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் மற்றும் ராஜா ராணி உள்ளிட்ட படங்கள் அவருக்கு மிகப்பெரிய புகழை தேடி தந்தன.

சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு
நேற்று நடைபெற்ற தமிழக தேர்தலில் வாக்களித்த நடிகர் சிம்பு, நடிகர் ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அவருக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். சிம்பு மற்றும் ஜெய் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ள நிலையில், சிம்புவின் வரவு தனக்கு எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக இருந்தது என நடிகர் ஜெய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
கேக் ஊட்டிவிட்டு
மேலும், ஜெய்யுடன் இணைந்து கேக் கட்டிங் நிகழ்விலும் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, அவருக்கு கேக் ஊட்டி விடும் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார். ஜெய் பிறந்தநாள் விழாவில் அதிரடி என்ட்ரி கொடுத்து பலரையும் ஆச்சர்யப்படுத்திய நடிகர் சிம்புவின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

விரைவில் மாநாடு
மே 13ம் தேதி ரம்ஜான் பண்டிகைக்கு வரும் என்று எதிர்பார்த்த சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. கூடிய விரைவிலேயே எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்து படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தியேட்டரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.