கெட்டவன் வைப் வருதே.. உடல் எடையை மீண்டும் அதிரடியாக குறைத்த சிம்பு.. பத்து தல ஆடியோ லாஞ்சுக்கு ரெடி!
சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் உடல் எடை அதிகமாக இருந்த நிலையில், நடிகர் சிம்புவை பலரும் பங்கமாக கலாய்த்தனர்.
ஆனால், அத்தனை பேருக்கும் ஈஸ்வரன் மற்றும் மாநாடு படங்கள் மூலமாக பக்காவாக பதிலடி கொடுத்தார் சிம்பு.
பத்து தல படத்திற்காக மீண்டும் வெயிட் போட்ட நிலையில், மீண்டும் பழைய படிக்கு சிம்பு மாற ரொம்ப நாள் ஆகும் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், திடீரென ஆளே அடையாளம் தெரியாமல் மாறி மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.

பத்து தல ஆடியோ லாஞ்ச்
மார்ச் 18ம் தேதி பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. கடைசியாக விஜய்யின் வாரிசு இசை வெளியீட்டு விழா அங்கே வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில், சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

டீசர் வெளியீட்டு விழாவுக்கு வரல
சமீபத்தில் எளிமையான முறையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பத்து தல படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், இயக்குநர் ஒபெலி கிருஷ்ணா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றனர். சிம்பு அந்த விழாவுக்கு வரவில்லை. அதற்கான காரணத்தையும் இயக்குநர் அங்கேயே கூறியிருந்தார்.

மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி
பேங்காக்கில் நடிகர் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்து வருவதாக கூறினர். இந்நிலையில், செம டிரான்ஸ்ஃபர்மேஷன் உடன் மீண்டும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் சிம்பு. இனிமேல், உடம்பை ஏற்றுவது, குறைப்பது எல்லாம் தனக்கு கை வந்த கலை என்பது போல மாஸ் போஸ் கொடுத்துள்ளார்.

செம டிரான்ஸ்ஃபர்மேஷன்
வெந்து தணிந்தது காடு படத்திற்காக 19 வயது இளைஞராக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய சிம்பு, பத்து தல படத்துக்காக அதிக எடை போட்ட நிலையில், தற்போது மீண்டும் செம ஸ்மார்ட்டாக டிரான்ஸ்ஃபார்ம் ஆகி உள்ள லேட்டஸ்ட் போட்டோவை போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

கெட்டவன் வைப்ஸ்
வல்லவன் படத்தை இயக்கிய சிம்பு அதன் பின்னர் கெட்டவன் படத்தை இயக்கப் போவதாக அறிவித்து ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியிட்டார். ஆனால், அதன் பின்னர் அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சிம்புவின் இந்த லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் கெட்டவன் கெட்டப்பில் இருக்காரே சிம்பு, ஒரு வேளை அடுத்து அந்த படத்தை ஆரம்பிப்பாரா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











