யாரையும் இவ்ளோ அழகா.. கார்த்தியின் சுல்தான் பட பாடலுக்கு குரல் கொடுத்த சிம்பு.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: சிம்புவின் குரலில் ஒரு பாடல் வெளியாகிறது என்றாலே அது சூப்பர் டூப்பர் ஹிட் தான்.
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
அந்த படத்தின் செகண்ட் சிங்கிளான "யாரையும் இவ்ளோ அழகா" என்கிற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

ரெமோ இயக்குநர்
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பாக்கியராஜ் கண்ணன். செம ரிச் கலரில் ரெமோ படத்தை உருவாக்கி இருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் ரெமோ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்தியின் சுல்தான்
ரெமோ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடை வேளைக்கு பிறகு பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சுல்தான் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அனிருத் குரலில்
சுல்தான் படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். முதல் பாடலான ஜெய் சுல்தான் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடி இருந்தார். சமீபத்தில் வெளியான அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹாட் லிஸ்டில் இடம்பிடித்தது.

யாரையும் இவ்ளோ அழகா
சுல்தான் படத்தின் செகண்ட் சிங்கிளாக "யாரையும் இவ்ளோ அழகா" என்கிற பாடல் உருவாகி உள்ளது. இன்று மாலை 7 மணிக்கு அந்த பாடல் வெளியாக உள்ள நிலையில், தற்போது அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ள அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. விவேக் மற்றும் மெர்வின் உடன் சிம்பு இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

டிரெண்டாகும் சிலம்பரசன்
#SilambarasanTR என்கிற ஹாஷ்டேக்கையும் சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். சிம்புவின் குரலில் வெளியாகும் அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்று வந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தியின் சுல்தான் பாடலும் செம ஹிட்டாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மாநாடு அப்டேட்
மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ஹாலிவுட் படமான டெனெட் படத்துடன் ஒப்பிடப்பட்டது. மாநாடு படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், அந்த படம் எப்போது வரும் டிரைலர் எப்போ வரும், பாடல்களை ரிலீஸ் பண்ணுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். உரிய நேரத்தில் ரசிகர்களுக்கான அப்டேட் கிடைக்கும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வனில் பிசி
பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். ஹைதராபாத்தை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய இயக்குநர் மணிரத்னம் மற்றும் படக்குழுவினர் கடின உழைப்பை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











