அட்டகாசமான வீடியோ.. ட்விட்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு.. தெறிக்கவிடும் ரசிகர்கள்!

By

சென்னை: நடிகர் சிம்பு, சோசியல் மீடியாவில் மீண்டும் இணைந்துள்ளதை அவர் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

சினிமா நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

சமூக பிரச்னைகளுக்கு கருத்துச் சொல்வது, தங்கள் படங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் அப்டேட்களை இதன் மூலம் செய்து வருகின்றனர்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

நடிகைகள், தங்களுடைய புதிய புகைப்படங்களை அப்டேட் செய்து வருகின்றனர். சோசியல் மீடியா அவர்களின் செல்லப் பிள்ளையாக மாறி இருக்கிறது. இதில் மற்ற நடிகர்களை போலவே நடிகர் சிம்புவும் இணைந்திருந்தார். சில வருடங்களுக்கு முன், இதில் இருந்து திடீரென விலகினார்.

சிலம்பம், நடனம்

சிலம்பம், நடனம்

இந்நிலையில், அவர் மீண்டும் சோசியல் மீடியாவில் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது. அதன்படி நடிகர் சிம்பு ட்விட்டரில் இன்று இணைந்துள்ளார். இதற்காக ஸ்பெஷல் வீடியோவை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கடுமையாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி, சிலம்பம், நடனம், யோகா, தற்காப்பு கலை பயிற்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

ஹேஷ்டேக் டிரெண்ட்

அட்டகாசமான பின்னணி இசையுடன் உருவாகியுள்ள இந்த வீடியோவை சிம்பு ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதையடுத்து #SilambarasanTR என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. சோசியல் மீடியாவுக்கு சிம்பு மீண்டும் வந்ததை அடுத்து நடிகர்கள் மஹத், ஹரீஷ் கல்யாண் உள்பட பலர் வரவேற்றுள்ளனர்.

Recommended Video

SIMBU GRAND RE-ENTRY DATE AND TIMING OFFICIALLY ANNOUNCED
நிதி அகர்வால்

நிதி அகர்வால்

நடிகர் சிம்பு, இப்போது சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விசயதசமி அன்று வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்காக சுமார் 20 கிலோ வரை எடை குறைத்துள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X