ஷூட்டிங் கேப்பில்.. இருமுடி அணிந்து சபரிமலை செல்லும் நடிகர் சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகர் சிம்பு இருமுடி சுமந்து சபரிமலை செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Recommended Video
நடிகர் சிம்பு, இப்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

பொங்கலுக்கு ஈஸ்வரன்
இந்த படத்துக்கு முன் குறுகியகால படமாக ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை சுசீந்திரன் இயக்கியுள்ளார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.

கல்யாணி பிரியதர்ஷன்
இந்நிலையில், மாநாடு படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அந்த ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்து விட்டது. இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் ஏற்காட்டில் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்
பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உள்பட பலர் நடிக்கின்றனர். இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு. அவருடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களி டையே வரவேற்பை பெற்றது.

அன்டோல்ட் ஸ்டோரி
இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி இருந்தார். இந்நிலையில் சிம்பு புதிய போட்டோஷூட் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். திருகிய மீசை, நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சிம்பு, An untold story' என டைட்டில் வைத்திருந்தார்.

சபரிமலைக்கு மாலை
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்நிலையில் அவர் சில நாட்களுக்கு முன் சபரிமலைக்கு மாலை அணிந்திருந்தார். இப்போது இருமுடி சுமந்து சபரிமலைக்கு அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் சபரிமலை செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











