சம்பளத்தை எவ்ளோ வேணா குறைக்க ரெடி.. ஆனால், ஒரு கண்டிஷன்.. சிம்பு போடும் சூப்பர் கணக்கு!

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் வரும் வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான சம்பளத்தை அதிரடியாக சிம்பு குறைத்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பு தகவல்கள் வெலியாகி உள்ளன.

சினிமா நடிகர்கள் எதை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்வார்கள் ஆனால், ஏற்றிய சம்பளத்தை மட்டும் என்றைக்குமே குறைத்து கொள்ள மாட்டார்கள் என்கிற எழுதப்படாத விதியே இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் சிம்பு இப்படி இறங்கி வருவதற்கு பின்னணியில் என்ன பிளான் இருக்கு என்று பார்த்தால், பலரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு சூப்பர் ஐடியாவுடன் தான் இந்த ஆஃபரை அவர் அறிவித்திருக்கிறார் என்கின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு அதிகம்

சிவகார்த்திகேயனுக்கு அதிகம்

நடிகர் தனுஷ், சிம்பு எல்லாமே 15 முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், அடுத்த அடுத்த 100 கோடி ஹிட் படங்களை கொடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அதிகபட்சமாக ஒரு படத்துக்கு 25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்க உடனடியாக சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் சம்பளத்தை அதிரடியாக உயர்த்த ஆரம்பித்து விட்டனர்.

சின்ன தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்

சின்ன தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்

ஹீரோக்களின் சம்பளமே 30 கோடியை தாண்டினால் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 100 கோடியை தொடுகிறது. இதனால், சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் எல்லாம் முன்னணி இளம் நடிகர்கள் பக்கமே போக முடியாத சூழலில் ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன், கவின் உள்ளிட்ட நடிகர்களை வைத்து நல்ல படம் பண்ணி வருகின்றனர்.

கமல் தயாரிப்பில் சிம்பு

கமல் தயாரிப்பில் சிம்பு

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு அடுத்ததாக கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.

ரஜினி மறுக்கும் படங்களில் சிம்பு

ரஜினி மறுக்கும் படங்களில் சிம்பு

பத்து தல படத்திலேயே ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. ஆனால், அவர் அதில் நடிக்க மறுத்து விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்க வேண்டிய கதையில் தான் சிம்பு அடுத்ததாக நடிக்க போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சம்பளத்தை குறைத்த சிம்பு

சம்பளத்தை குறைத்த சிம்பு

நடிகர் சிம்பு இந்த படத்தில் நடிக்க முதலில் 40 கோடி ரூபாய் சம்பளம் கேட்டார் என்றும் அதன் பிறகு படத்தின் பட்ஜெட் காரணமாக தனது சம்பளத்தையே 30 கோடியாக குறைத்துக் கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அப்டேட்டான லேட்டஸ்ட் தகவலாக அந்த சம்பளத்தையும் அதிரடியாக குறைத்து வெறும் 25 கோடி கொடுத்தால் கூட இந்த படத்தில் நடிக்கிறேன் என்று கூறியுள்ள சிம்பு மற்ற தயாரிப்பாளர்களுக்கும் ஒரு பெரிய ஆஃபரை கொடுத்திருப்பது தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

என்ன வச்சு பெரிய பட்ஜெட் படம் பண்ணுங்க

என்ன வச்சு பெரிய பட்ஜெட் படம் பண்ணுங்க

100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் பெரிய படங்களை என்னை வைத்து பண்ணினால் நான் என் சம்பளத்தில் கெடுபிடி காட்டாமல் படத்திற்கு தகுந்தது போல சம்பளத்தை குறைக்கவும் தயார் என்றும் நடிகர் சிம்பு பெரிய மனதுடன் இப்படியொரு கொக்கியை கார்ப்பரேட் தயாரிப்பாளர்களுக்கு வீசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிசினஸ் நடக்கணுமே

பிசினஸ் நடக்கணுமே

சிம்பு செம ஓபனாக சம்பளத்தை குறைத்துக் கொண்டு கூட நடிக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்களை என்னை வைத்து பண்ணுங்க என கேட்பதெல்லாம் சரியான கோரிக்கை தான். ஆனால், சிம்பு நடிக்கும் படங்கள் 100 கோடி வசூலை தாண்டி பெரியளவில் பிசினஸ் பண்ணினால் தானே அது சாத்தியம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். பத்து தல படம் எந்தளவுக்கு வியாபாரம் செய்கிறதோ அதை வைத்துத் தான் சிம்பு நினைத்தது நடக்கும் என்கின்றனர்.

ஃபேன் பேஸை காட்டவே

ஃபேன் பேஸை காட்டவே

சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் பத்து தல இசை மற்றும் ட்ரெயலர் வெளியீட்டு விழாவை அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக பண்ண காரணமே தனது ஃபேன் பேஸை காட்ட சிம்பு போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச் என்கின்றனர். சிறிய பட்ஜெட் படங்களையும் சமீப காலமாக இதன் காரணமாகவே தவிர்த்து வருகிறார் சிம்பு என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X