அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம்.. நான் அவதரிப்பேன்.. அதிர வைக்கும் சிம்புவின் மாநாடு செகண்ட் லுக்!

சென்னை: நெற்றியில் புல்லட்டுடன் மாநாடு ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், துப்பாக்கியுடன் வால்வரின் லுக்கில் ஏகப்பட்ட சிம்பு இருக்கும் செகண்ட் லுக் தற்போது வெளியாகி மிரட்டுகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இப்பவே அதிகரித்து விட்டது.

சிம்புவின் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட அப்டேட்கள் வரிசையாக குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

யானை இல்லை குதிரை

யானை இல்லை குதிரை

விழுந்தா எந்திரிக்க முடியாமல் தவிக்க நான் ஒண்ணும் யானை கிடையாது குதிரை டக்குன்னு எந்திரிச்சுடுவேன்னு சூப்பர்ஸ்டார் சொன்னது, இப்போ லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவுக்கும் அப்படியே செட்டாகி உள்ளது. சிம்புவுக்கு ரெட் கார்டு என சொன்ன நிலையில், ஈஸ்வரன், மாநாடு என ரெட் கார்ப்பெட் விரிக்கப்பட்டு வருகிறது.

ஸ்லிம்மான சிம்பு

ஸ்லிம்மான சிம்பு

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் செம குண்டாக இருந்த சிம்புவை ஏகப்பட்ட பேர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், தனுஷ் மாதிரி ஒல்லியாக பழைய சிம்பு போல கடினமான உடற்பயிற்சி செய்து ஆளே மாறி ஈஸ்வரன் ஃபர்ஸ்ட் லுக்கிலும், டீசரிலும் அசத்தினார். ஒவ்வொரு போட்டோவும் வேற லெவல் ஹிட் அடித்தன.

நெற்றி பொட்டில் புல்லட்

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியாகி வைரலானது. அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவின் நெற்றியில் புல்லட் பாய்ந்திருக்க, தலையில் ரத்தம் வடியும் அளவுக்கு ஃபர்ஸ்ட் லுக் இடம்பெற்று இருந்தது. அரசியல் படமாக உருவாக உள்ள மாநாடு படத்தில் இஸ்லாமிய இளைஞராக சிம்பு நடித்துள்ளார்.

ரசிகர்கள் வருத்தம்

சிம்புவின் நெற்றியில் புல்லட் பாய்ந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த சிம்பு ரசிகர்கள், சிலர் இந்த ஃபர்ஸ்ட் லுக் நெகட்டிவாக இருப்பதாக கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதற்கு, ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பாக வெளியான போஸ்டரே சிறப்பாக இருந்தது என்றும் கமெண்ட் செய்தனர்.

துப்பாக்கியும் கையுமாக

இந்நிலையில், அதிரடியான செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார். வால்வரின் லுக்கில், செம ஸ்லிம்மாக கையில் துப்பாக்கி உடன் ஏகப்பட்ட சிம்பு நிற்க வேற லெவலில் செகண்ட் லுக் போஸ்டர் மிரட்டுகிறது.

அதர்மம் தலை தூக்கினால்

அதர்மம் தலை தூக்கினால்

மேலும், செகண்ட் லுக் போஸ்டருடன் எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன் என சிம்பு அப்துல் காலிக்கின் பக்கா மாஸான போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட் கொடுத்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், இது மரண மாஸ் தலைவா என கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் ஜோடி

சிவகார்த்திகேயன் ஜோடி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழுக்கு அறிமுகமானவர். அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை ஆந்தாலஜியில் சுதா கொங்கரா இயக்கிய போர்ஷனில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X