STR இன் அரசன்.. ரிலீஸ் தேதி முடிவு ஆயிடுச்சு போல.. மக்களே இது மறக்க முடியாத சம்பவமா மாறப்போகுது
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு இயக்கி வருகிறார். ஏற்கனவே வெளியான படமான வடசென்னை படத்தோடு தொடர்புடைய கதையைத்தான் இயக்குநர் வெற்றி மாறன் இந்த அரசன் படத்துக்காக உருவாக்கி உள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இப்படி இருக்கையில் படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவில் இருப்பதாக விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான படமான தக் லைஃப் படம் தான். இந்த படத்தில் சிம்புவின் கெட்-அப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், படம் பெரிய அளவில் கிளிக் ஆகவில்லை. இப்படி இருக்கையில் அடுத்து சிம்பு படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. குறிப்பாக அவரது கெட்-அப் பலருக்கும் ஒரு மாஸான கதாபாத்திரத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களும் கொண்டவராக இருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபட்டது.

அரசன்: இப்படி இருக்கையில் நடிகர் சிம்பு, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் கமிட் ஆனார். கலைப்புலி எஸ். தாணு படத்தை தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக கமிட் செய்யப்பட்டார். இவர்களின் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதான். படத்தில் டைட்டில் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கையில் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என்று விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ரிலீஸ் தேதி: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " அரசன் படத்தை தீபாவளிக்கு வெளியிட மொத்த படக்குழுவும் தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள். சிம்புவும் வெற்றிமாறனும் நிதானமாக ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு ஷாட்டையும், ஒவ்வொரு ஃபிரேமையும் மெருகேற்றி வருகிறார்கள். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் படம், இதுவரை வெளிவந்த வெற்றி மாறன் படங்களில் இருந்து மொத்தமாக மாறுபட்டு, கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கமல், வட சென்னை படத்தின் தீவிர ரசிகர்களை கொண்டாட வைக்கும் அளவுக்கு ஒரு நியோ கமர்ஷியல் விஷயங்கள் கொண்ட படமாக இது இருக்கும்.

பாக்ஸ் ஆபீஸ்: சிம்பு மற்றும் தீவிர சினிமா ரசிகர்களுக்கு ஒரு முழு விருந்து காத்திருக்கிறது எனக் கூறும் அளவுக்கு படம் உருவாகி வருகிறது. அரசன் படம் தமிழ் சினிமாவின் எல்லா எல்லைகளையும் தகர்க்கும்!! குறிப்பாக முதல் நாள் வசூல் சாதனைகள் தகர்க்கப்படப் போகின்றன" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications