தன்னந்தனி நாடு தமிழ்நாடு, தட்டுகெட்டு போறதென்ன வெளிநாடு.. மாஸ் கிளப்பும் சிம்புவின் தமிழன் பாட்டு!

By

சென்னை: சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கிளான தமிழன் பாட்டு இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம், ஈஸ்வரன். இதன் ஷூட்டிங் முடிந்து விட்டது.

பழனி பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நந்திதா ஸ்வேதா

நந்திதா ஸ்வேதா

நிதி அகர்வால் ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். பால சரவணன், முனீஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமன் இசை அமைக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிமாகி இருக்கிறார்.

வனத்துறை சந்தேகம்

வனத்துறை சந்தேகம்

இந்தப் படத்துக்காக, பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. அதில் ஒரிஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வன அதிகாரிகள் படக் குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

ரப்பர் பாம்பு

ரப்பர் பாம்பு

இயக்குநர் சுசீந்திரன், வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசனிடம் நேரில் சென்று, விளக்கம் அளித்தார். ரப்பர் பாம்பை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் அவர் விளக்கினார். இதையடுத்து அவர்கள் அது ரப்பர் பாம்பு என்பதை நம்பினர்.

Recommended Video

Muslim அவதாரம் எடுத்த Simbu | Maanadu update | FilmiBeat Tamil
பட்டையை கிளப்பும்

பட்டையை கிளப்பும்

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலாக, தமிழன் பாட்டு இன்று காலை வெளியாவதாக நடிகர் சிம்பு அறிவித்திருந்தார். அதன்படி இந்த பாடல் இன்று வெளியிடப்பட்டது. பட்டையை கிளப்பும் இந்த பாடல் வைரலாகி வருகிறது.

வர்றான் வர்றான்

வர்றான் வர்றான்

பாடலில் பல மாஸ் வரிகள் இடம்பெற்றுள்ளன. 'தன்னந்தனி நாடு இந்த தமிழ்நாடு, நீ தட்டுகெட்டு போறதென்ன வெளிநாடு', உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு, உசுரையும் கொடுக்க உறவிருக்கு', வர்றான் வர்றான் இந்த தமிழன்.. வரலாற்றை திருப்பி எழுதும் தலைவன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பாடலை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X