twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையரங்குகளில் மாஸ் காட்டும் சிம்புவின் மாநாடு.. 3ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: வந்தான். டிக்கெட் எடுத்தான்.. படம் பார்த்தான்.. ரிப்பீட்டு என சிம்பு ரசிகர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மாநாடு திரைப்படத்தை டைம் லூப் போலவே தினமும் பார்த்து வருகின்றனர்.

    கொட்டும் மழையிலும் குடும்பத்துடன் திரையரங்குகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

    ரம்யா கிருஷ்ணன் முன்பாக பிரியங்காவை பீஸு பீஸாக கிழித்து தொங்கவிட்ட தாமரை.. நல்லா பேசுறாங்க!ரம்யா கிருஷ்ணன் முன்பாக பிரியங்காவை பீஸு பீஸாக கிழித்து தொங்கவிட்ட தாமரை.. நல்லா பேசுறாங்க!

    மாநாடு திரைப்படத்தின் முதல் இரு நாள் வசூலை தயாரிப்பாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், 3வது நாள் வசூல் குறித்து இங்கே பார்ப்போம்.

    தரமான ஸ்க்ரிப்ட்

    தரமான ஸ்க்ரிப்ட்

    முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் திரைக்கதை நல்லா இல்லை என்றால் விமர்சனங்கள் நெகட்டிவ் ஆகத் தான் வரும். நல்ல திரைக்கதையில் சின்ன ஹீரோ நடித்தாலும் மக்கள் பாராட்டுவார்கள். வெங்கட் பிரபுவின் முந்தைய படங்களை கழுவி ஊற்றிய விமர்சகர்கள் கூட இந்த முறை படத்தை பாராட்டி உள்ளனர். அந்த அளவுக்கு தரமான ஸ்க்ரிப்ட் தான் மாநாடு படத்தை அனைத்து ரசிகர்களும் பிரபலங்களும் பாராட்ட காரணமாக அமைந்துள்ளது.

    தயாரிப்பாளரே சொல்லிட்டாரு

    தயாரிப்பாளரே சொல்லிட்டாரு

    மாநாடு திரைப்படம் முதல் நாளில் 8 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் இரண்டாம் நாளில் 9 கோடி வசூல் பெற்றதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், மொத்தம் இரண்டு நாட்களுக்கும் சேர்த்தே 14 கோடி ரூபாய் வசூல் வந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியே தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்து தெளிவு படுத்தி விட்டார்.

    மூன்றாம் நாள் வசூல்

    மூன்றாம் நாள் வசூல்

    மூன்றாம் நாளான நேற்றும் மழை தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கொட்டித் தீர்த்தது. முதல் இரு நாளில் 14 கோடி ரூபாய் வசூல் வந்த நிலையில், மூன்றாம் நாள் வசூல் 4 முதல் 6 கோடி வரை வந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 20 கோடி ரூபாய் வசூலை இதுவரை மாநாடு திரைப்படம் வசூல் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

    முதல் வார நிலவரம்

    முதல் வார நிலவரம்

    இந்நிலையில், முதல் வாரம் படத்தின் வசூல் அதிகபட்சமாக 22 முதல் 25 கோடி வரை வர வாய்ப்பிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர். தெலுங்கு, இந்தி என படத்தின் ரீமேக் உரிமம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆக உள்ள நிலையில், மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சிக்கு இந்த படம் லாபத்தையே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Recommended Video

    Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil
    பொங்கல் வரை

    பொங்கல் வரை

    தமிழ் சினிமாவில் வரும் பொங்கல் வரை எந்தவொரு பெரிய படங்களும் வெளியாகாத சூழ்நிலையில், சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்தை போலவே 4 வாரங்களுக்கும் மேல் நல்ல வசூலை சிம்புவின் மாநாடு திரைப்படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Silambarasan TR’s Maanaadu Day 3 box office also collected a huge profit in all areas of Tamil Nadu. Producer Suresh Kamatchi already happy about the film’s success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X