மாநாடு டப்பிங் ஆரம்பம்.. எல்லாம் கடவுள் அருள் என தயாரிப்பாளர் ட்வீட்.. ஆனா சிம்புவை காணோமே?
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், இன்று சிறிய பூஜையுடன் டப்பிங் பணிகள் தொடங்கின.
Recommended Video
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
டப்பிங் பணிகள் ஆரம்பமாகி உள்ளன என்கிற அறிவிப்புடன் வெளியான போட்டோக்களில் நடிகர் சிம்பு இல்லாததால் ரசிகர்கள் சற்றே அப்செட் ஆகி உள்ளனர்.

சிம்புவின் மாநாடு
இயக்குநர் வெங்கட் பிரபுவின் பாலிடிக்ஸ் எனும் பெயரில் உருவாகி வரும் சிம்புவின் மாநாடு திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இந்நிலையில், சமீபத்தில் தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மாநாடு டப்பிங் ஆரம்பம்
மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் ஆரம்பம் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்டு சில போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டப்பிங் கலைஞர்கள் அந்த போட்டோக்களில் இடம்பெற்றிருந்தனர்.

கடவுள் அருளால்
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் மற்ற பணிகளுக்கும் இதுவரை எந்தவொரு தடையும் அமலாகவில்லை. இந்நிலையில், கடவுள் அருளால் மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டன என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் போட்டுள்ளார்.

சிம்பு இல்லை
மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பமாகி விட்டதாக போட்டோக்கள் வெளியான நிலையில், நடிகர் சிம்புவை எங்கே காணவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் தனது போர்ஷனை நடிகர் சிம்பு ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











