பிரம்மாண்ட மாநாடா இருக்கும் போல.. அனல் பறக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. டிரெண்டாகும் #Maanaadu

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

நடிகர் சிம்பு, நாயகி கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

#Maanaadu ஹாஷ்டேக்கை சிம்பு ரசிகர்கள் வெறித்தனமாக ட்விட்டரில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

அசத்தும் அப்துல் காலிக்

அசத்தும் அப்துல் காலிக்

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வருகிறது மாநாடு திரைப்படம். அரசியல் மாநாடு ஒன்றில், அப்துல் காலிக் என்ன செய்யப் போகிறார் என்கிற ட்விஸ்ட்டுடன் இந்த படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் சிம்பு இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

நாயகி மற்றும் நண்பர்களுடன்

நாயகி மற்றும் நண்பர்களுடன்

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். சிம்புவின் மாநாடு படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாயகி கல்யாணி மற்றும் சிம்புவின் நண்பர்களான பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோருடன் சிம்பு எடுத்துக் கொண்ட போட்டோக்களும் வெளியாகி உள்ளன.

தயாரிப்பாளர் ஹேப்பி

தயாரிப்பாளர் ஹேப்பி

இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் உடன் பேசும் போது க்ளிக் செய்யப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. மாநாடு படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதால் தயாரிப்பாளர் ரொம்பவே ஹேப்பியாக காணப்படுகிறார்.

ஸ்ரீதர் மாஸ்டர்

ஸ்ரீதர் மாஸ்டர்

பிரபல நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டர் உடன் நடிகர் சிம்பு கேரவனில் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் சிம்பு ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து, மாநாடு படத்திற்காக மிகவும் ஆவலுடன் தாங்கள் காத்திருப்பதை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் மாநாடு படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களுடன் சிம்பு

ரசிகர்களுடன் சிம்பு

சென்னை இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட மாநாடு ஸ்டேஜ் போட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நடைபெற்ற படப்பிடிப்பில் ஏராளமான ரசிகர்கள் சிம்புவை சந்தித்து செல்ஃபிக்களையும் புகைப்படங்களையும் ஏராளமான ரசிகர்கள் எடுத்துள்ளனர். அதன் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X