Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
Maanaadu Review LIVE: சிம்புவின் மாநாடு திரைப்படம் எப்படி இருக்கு?
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் சற்று முன் வெளியானது.
நேற்று இரவே பிரச்சனைகள் தீர்ந்து இன்று அதிகாலை காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெஷல் ஷோ ரத்தானது.
KDM இன்னும் வழங்கப்படவில்லை என புதிய பிரச்சனை கிளம்பிய நிலையில், தற்போது அந்த பிரச்சனையும் தீர்ந்து மாநாடு திரைப்படம் வெளியானது.
விஜய் டிவி புகழ்
விஜய் டிவி பிரபலமான புகழ் பதிவிட்டுள்ள டிவிட்டில், அண்ணன் சிம்பு நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு பார்த்தேன். நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த படம். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. புதுவித முயற்சிகளை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள். வெற்றிகள் தொடர எஸ்ஜே சூர்யா, வெங்கட்பிரபு, பிரேம் ஜி, ரிச்சர்டு நந்தன் ஆகியோருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
அண்ணன் @SilambarasanTR_ நடிப்பில் வெளிவந்துள்ள மாநாடு பார்த்தேன். நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த படம். எனக்கு மிகவும் பிடித்துள்ளது. புதுவித முயற்சிகளை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.வெற்றிகள் தொடர @iam_SJSuryah @vp_offl @Premgiamaren @Richardmnathan
— vijaytvpugazh_official (@VijaytvpugazhO) November 25, 2021
என்னா நடிப்பு சார்
பெரும் இழுபறிக்கு பின்னர் இன்று வெளியாகியுள்ள சிம்புவின் மாநாடு படத்தை பார்த்த இந்த ரசிகர் என்னா நடிப்பு எஸ்ஜே சூர்யா சார் என பாராட்டியுள்ளார். மேலும் நடிகர் சிம்புவுக்கு என்ன ஒரு கம்பேக் என்றும் புகழ்ந்துள்ளார். மேலும் பிளாக் பஸ்டர் மாநாடு என்றும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
Enna Nadippu @iam_SJSuryah Sir😀💥
— BE(A)ST 💥 (@TN_TVFC) November 25, 2021
What a comeback @SilambarasanTR_ 👌
Blockbuster #Maanaadu #மாநாடு
லாக்டவுனுக்கு பிறகு சூப்பர் படம்
மாநாடு படத்தை பார்த்த இந்த ரசிகர், லாக்டவுனுக்கு பிறகு ஒரு சூப்பர் படம்ன்னா அது மாநாடு மட்டும்தான்... வேற லெவல் சார்... எங்களை எண்டெர்டெய்ன் செய்ததற்கு நன்றி வெங்கட் பிரபு சார்.. Atman தமிழ் சினிமாவுக்கு தேவை.. என பதிவிட்டுள்ளார்.
Lockdown ku apuram oru Super Padam na athu #மாநாடு matumthan....vera level sir .. ThNks for entertaining us @vp_offl #Atman Tamil Cinema need more .....
— sodesign.in (@blogsodesigns) November 25, 2021
படத்தின் தூணே எடிட்டர்தான்
நடிகர் சிம்புவின் ரசிகரான இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ள டிவிட்டில் படத்தின் தூணே எங்கள் எடிட்டர் சார் பிரவீன்தான். உங்க ஒரு ஒரு கட்டும் தரம்... கல்யாணி பிரியதர்ஷன் மேம் உங்களின் சொந்த குரல் செம க்யூட் என பதிவிட்டுள்ளார்.
Count 3.... 💥💥💥💥
— Shakthi_raja (@Shakthiraja19) November 25, 2021
For Thalaivan @SilambarasanTR_
& Also for terrific @iam_SJSuryah
Brilliant @vp_offl sir
Paaah!!! Compulsory
Blockbuster 💥💥💯♾️#SilambarasanTR #Maanaadu #MaanaaduFrom25thNov#மாநாடு #BlockbusterMaanaadu pic.twitter.com/Unzknp8XTB
கடின உழைப்பு தோற்காது
மாநாடு படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருவதை பார்த்த சீரியல் நடிகையான நீலிமா ராணி தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில் கடின உழைப்பும் ஆர்வமும் எப்போதும் தோற்காது! #மாநாடு படத்திற்கான பாராட்டுக்களைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. படக்குழுவுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
Hard work and passion never fails! Feels so good to hear raving reviews for #Maanaadu congratulations team 🥳 can’t wait to watch @vp_offl @Premgiamaren @sureshkamatchi @SilambarasanTR_ he is back! pic.twitter.com/nnPPpwb0yA
— neelima esai (@neelimaesai) November 25, 2021
2 பேருமே நல்லா இருப்பீங்க
சிம்புவின் மாநாடு படத்தை பார்த்த இந்த நெட்டிசன், நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதை நினைவு கூர்ந்துள்ளார். அதாவது எஸ்ஜே சூர்யா கூறிய சிம்பு சார் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன், என்பதை மேற்கோள் காட்டிய உங்கள் வார்த்தை பலித்துவிட்டது என பதிவிட்டுள்ளார். மேலும் படமும் நல்லா இருக்கு இரண்டு பேருமே நல்லா இருப்பீங்க.. என்றும் வாழ்த்தியுள்ளார்.
உங்க வார்த்தை பலித்துவிட்டது சார் @iam_SJSuryah
— 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐢 𝗥𝗧𝗞 (@iam_Tharani) November 25, 2021
சிம்பு சார் நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன்.
படமும் நல்லா இருக்கு இரண்டு பேருமே நல்லா இருப்பீங்க.. @SilambarasanTR_#MaanaaduBlockbuster #MaanaaduFDFS #மாநாடு #Maanaadu #SilambarasanTR pic.twitter.com/zFJzef63jy
மாஸ்டர் முதல் மாநாடு வரை
கொரோனா அச்சத்தால் பெரிய படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் இருந்த நிலையில், விஜய்யின் மாஸ்டர் 2021ம் ஆண்டு ஆரம்பத்தில் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களை தியேட்டருக்கு வர வழைத்தது. அதே போல இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகி உள்ள மாநாடு திரைப்படமும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வர வைத்துள்ளது என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
2021 started by #Master
— Chemists ⚕️ (@naane_naanai) November 25, 2021
And ends with #Maanaadu #ThalapathyVijay #SilambarasanTR
சிங்கப்பூரில் ரிலீஸ்
தொடர் மழை, கொரோனா பாதிப்பு, லேட் ரிலீஸ் என பல தடைகளை தாண்டி மாநாடு படத்திற்கு கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பு காரணமா சிங்கப்பூரில் உள்ள தியேட்டர்களில் படம் வெளியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
#Maanaadu
— Movies Singapore (@MoviesSingapore) November 25, 2021
*Uncertain weather (Continuous rains)
*2000+ COVID cases
*Late start of online bookings
But nothing is affecting the #STR movie FANTASTIC ADVANCE SALES all over Singapore 🇸🇬 with additional shows being added
Added in GVMAX (Asia’s largest screen) after the response pic.twitter.com/Zg6JgCCRoq
பக்கா தியேட்டர் மெட்டீரியல்
”மாநாடு படம் பக்கா தியேட்டர் மெட்டீரியல் எல்லாரும் தியேட்டர் ல போய் பாருங்க.. படம் முடிஞ்சு வெளிய வரப்போ மறுபடியும் வரனும் னு தோன வைக்கும் அப்படி ஒரு படம்” என இந்த விஜய் ரசிகரும் ட்வீட் போட்டுள்ளார்.
#மாநாடு படம் பக்கா தியேட்டர் Material எல்லாரும் தியேட்டர் ல போய் பாருங்க 🔥🔥
— Vɪᴊᴀʏ (@lmvijay77___) November 25, 2021
படம் முடிஞ்சு வெளிய வரப்போ மறுபடியும் வரனும் னு தோன வைக்கும் அப்படி ஒரு படம் 💯😎#MaanaaduFDFS #Maanaadu
இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நன்றி
டைம் லூப் எனும் வித்தியாசமான கான்செப்ட்டில் தலைவன் சிம்புவை நடிக்க வைத்ததற்கு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு பெரிய நன்றி என சிம்பு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Thankyou @vp_offl for bringing Timeloop concept .. @SilambarasanTR_ Thalaiva mass ❤️🔥 @iam_SJSuryah thalaivarey😂maja panirkinga ... @thisisysr marana sambavam 🔥🔥🔥 #Maanaadu pic.twitter.com/jetnp3GDgb
— Prasanth_crazy_on_Sunaina (@OnSunaina) November 25, 2021
உண்மையான மாநாடா?
இது சிம்புவின் மாநாடு திரைப்படமா? அல்லது உண்மையான மாநாடா? என்றே தெரியவில்லை என திரையரங்குகளில் கூடிய கூட்டத்தை வீடியோ எடுத்து போட்டு இந்த ரசிகர் சந்தோஷப்பட்டுள்ளார்.
இது மாநாடு படமா..? இல்ல உண்மையான மாநாடா னு டவுட்டா இருக்கு..🥵💥@SilambarasanTR_ #MaanaaduFDFS #Maanaadu pic.twitter.com/yUhqi64NrW
— பாம்ப் பக்கிரி (@bomb_pakkiri) November 25, 2021
நல்ல ஓப்பனிங்
விடுமுறை நாள் இல்லை.. தீபாவளி போன்ற பண்டிகை நாள் இல்லை.. இருந்தாலும் வியாழக் கிழமையான இன்று வெளியான மாநாடு படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
#Maanaadu full of positive reviews & Terrific opening
— Suresh Raina ❤ (@Cskpandi312) November 25, 2021
BLOCKBUSTER 🔥🔥🔥#மாநாடு pic.twitter.com/83BI6EKNTL
அதிகரித்த டிக்கெட் புக்கிங்
பெரிய புரமோஷன் எல்லாம் இல்லாமல் கடைசி வரை ரிலீஸ் ஆகுமா? ஆகாதா என்கிற நெருக்கடியில் ரிலீஸ் ஆன மாநாடு திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளிய நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் இந்த வார இறுதி நாட்கள் வரை டிக்கெட் புக்கிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Extraordinary bookings in all centers #Maanaadu pic.twitter.com/8wbMaOPHd2
— Trichy Films (@TrichyFilms) November 25, 2021
அரவிந்த் சாமி வாழ்த்து
சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, வெங்கட் பிரபு மற்றும் மாநாடு குழுவினர் உங்கள் வெற்றியை கொண்டாடுங்கள் என அரவிந்த் சாமி வாழ்த்தி உள்ளார்.
Wishing @vp_offl and the entire team great success. As someone who loved this script, I can confidently say that this is going to be a top notch entertainer! #Maanadu #STR @iam_SJSuryah enjoy your success 😊👍🏻 https://t.co/VGnQYzT5Ag
— arvind swami (@thearvindswami) November 25, 2021
அடுத்த ஷோவுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ்
வந்தான்.. படம் பார்த்தான்.. அடுத்த ஷோவுக்கு புக் பண்றான்.. ரிப்பீட்டு என மாநாடு பட வசனத்தையே மாற்றி சிம்பு ரசிகர்கள் தரமான சம்பவம் செய்து வருகின்றனர்.
Vanthan
— MSR (@itz_chillax) November 25, 2021
padam paaththan
Next show book pannan
REPEATU...#Maanaadu #Maanaadu #மாநாடு #Manaadu pic.twitter.com/cbUC3Dq1z6
அண்ணாத்த டைம் டிராவலர் படம்
”இது என்ன பெரிய Time loop movie. அண்ணாத்த படமெல்லாம் எவ்ளோ பெரிய Time traveller படம் தெரியுமா. படம் பாத்தவங்களையே 1980's கூட்டிட்டு போய்டிச்சு.” என ரஜினிகாந்தின் தீபாவளி ரிலீஸ் படமான அண்ணத்த படத்தை மாநாடு படத்துடன் கம்பேர் பண்ணி கலாய்த்து வருகின்றனர்.
இது என்ன பெரிய Time loop movie. அண்ணாத்த படமெல்லாம் எவ்ளோ பெரிய Time traveller படம் தெரியுமா. படம் பாத்தவங்களையே 1980's கூட்டிட்டு போய்டிச்சு.#Annaatthe #மாநாடு #Maanadu #MaanaaduFDFS pic.twitter.com/bwsFmEBW0u
— ☘️ Sathiyaraj Shanmugam🌾 (@SSathya2012) November 25, 2021
கோவை கற்பகம் திரையரங்கம்
கோவை கற்பகம் திரையரங்கில் வியாழக் கிழமையான இன்று ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர் என புகைப்படங்களுடன் சிம்பு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
#Coimbatore @KarpagamTheatre
— 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐢 𝗥𝗧𝗞 (@iam_Tharani) November 25, 2021
Wattaa an Crowd OmG 🥺 Emotionally @SilambarasanTR_ 😭❤️
Speechless @vp_offl @iam_SJSuryah @thisisysr @sureshkamatchi Thank you so much for Making #BlockbusterMaanaadu 🙏😍#Maanaadu #SilambarasanTR #MaanaaduFDFS #Simbu pic.twitter.com/LLr86QIEYj
3 ஆண்டுகால போராட்டம்
ஆனந்தக் கண்ணீர் வருதுன்னா.. 3 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என நடிகர் சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினரை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Happy tears 😭🤞🏻 3 years of dream fulfilled today.
— Surya Nagarajan (@SuryaNagarajan_) November 25, 2021
Sureshot Blockbuster #Maanaadu 💥
Thalaivaa @SilambarasanTR_, this is what we waiting for!! Now onwards your time starts again 💯💙 Let's rockkkkkkkk 💥 #SilambarasanTR #MaanaaduFDFS
ரொம்ப ரிஸ்க்கான விஷயம்
2021ம் ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுத்த திரைப்படமாக மாநாடு படத்தை நான் பார்க்கிறேன். டைம் லூப் எனும் புதுமையான ரொம்ப ரிஸ்க்கான விஷயத்தை வெங்கட் பிரபு கையாண்ட விதம் தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என இந்த ரசிகர் கூறியுள்ளார்.
#Maanaadu for me is easily the most gratifying Tamil theatrical experience of 2021. @vp_offl began the previous decade with a daring Anti-Hero premise in Mankatha. In Maanaadu's case @vp_offl has not just tried something new & risky but also backed up the idea with clever writing pic.twitter.com/a1mHa9aa5V
— Prince KSP (@KspNeroHardy) November 25, 2021
கிளைமேக்ஸ் சீன்
சிவன் சிலைக்கு பின்னால் இருந்து சிம்பு வரும் கிளைமேக்ஸ் காட்சி வீடியோவையும் ரசிகர்கள் ஷேர் செய்து மாநாடு பிளாக்பஸ்டர் என கொண்டாடி வருகின்றனர்.
#Maanaadu climaxes scenes 😇🙏💐💯✨ blockbuster 🔥 pic.twitter.com/EK9DxEwbBw
— Rajkumar Raj (@Rajkuma75717209) November 25, 2021
காட் இஸ் கிரேட்
பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் பல தடைகளை தாண்டி மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், "God is Great" என ட்வீட் போட்டுள்ளார்.
God is great. ❤️ #Maanadu #Maanaadu pic.twitter.com/XphL7iPBiQ
— vasuki bhaskar (@vasukibhaskar) November 25, 2021
பிரில்லியன்ட் திரைக்கதை
மாநாடு திரைப்படத்தின் திரைக்கதை பிரில்லியன்ட்டாக எழுதப்பட்டிருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபு எந்தவகையிலும் சொதப்பாததே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. நடிகர் சிம்புவுக்கு சரியான கம்பேக் இந்த படம் 4/5 மதிப்பெண்கள் என ரசிகர்கள் மார்க் போட்டு வருகின்றனர்.
#Maanaadu 4/5 - MUST WATCH... Brilliant Writing, Engaging Screenplay🔥 @SilambarasanTR_ - Kola Mass, @iam_SJSuryah - Mirattal. Yuvan BGM Thaaru Maar 🔥🥰💥 Fantastic Concept(Time Loop) & Super Execution👏🏻@kalyanipriyan Perfectly done their Job👍Proper Come Back For Our STR.
— Vijay (@Sin__gle) November 25, 2021
மாநாடு ஜூக் பாக்ஸ் ரிலீஸ்
மாநாடு படத்தின் அனைத்து பாடல்களுமே அடங்கிய ஜூக் பாக்ஸை தற்போது U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
Enjoy the complete #MaanaaduJukebox!
— U1 Records (@U1Records) November 25, 2021
Streaming now on @amazonmusic
🎧 https://t.co/l8Dtxn1BCC@SilambarasanTR_ @thisisysr @vp_offl @Premgiamaren @sureshkamatchi @kalyanipriyan @iam_SJSuryah #Maanaadu #MaanaaduFromToday pic.twitter.com/e8gSlvPLSu
கல்யாணி பிரியதர்ஷன் கலக்கல்
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு பிறகு சிம்புவின் மாநாடு படத்தில் நடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஆன் ஸ்க்ரீனில் அசத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
On screen la @kalyanipriyan ♥️😘
— Aaron Sundar (@sundar_aaron) November 25, 2021
Movie vera level thirumba thirumba pakkkalam without bore
Expectation fulluh satisfy panni irukkanga @SilambarasanTR_ @thisisysr @Premgiamaren @vp_offl @iam_SJSuryah Comeback for all 🔥🔥🔥#Maanadu #Maanaadu pic.twitter.com/LjhlaovEek
யுவன் சங்கர் ராஜா கலக்கிட்டாரு
மாநாடு திரைப்படத்தின் பின்னணி இசைக்காக யுவன் சங்கர் ராஜா அதிகம் மெனக்கெட்ட நிலையில் திரையில் அவரது பிஜிஎம் மிரட்டலாக உள்ளதாக ஏகப்பட்ட ரசிகர்கள் யுவனை கொண்டாடி வருகின்றனர்.
Antha Tudutudu Tudutudu Variation Ellamey..!! 😭👑💥@thisisysr #Maanaadu #மாநாடு pic.twitter.com/vu8QONNNjZ
— Rajaram (@Raja_ram12) November 25, 2021
பாசிட்டிவ் விமர்சனங்கள்
படத்துக்கு வராங்க.. பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுக்கிறாங்க.. ரிப்பீட்டு.. முடியல தலைவரே என சிலம்பரசன், எஸ்ஜே. சூர்யா உள்ளிட்ட படக்குழுவைனரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
படத்தின் குறை என்ன?
”படத்தில் குறைனு சொல்றதுக்கு ஒன்றும் இல்ல loop Movie இப்படி தான் இருக்கும். படம் பார்க்குற பொறுமை இருக்கவங்களுக்கு கண்டிப்பா படம் பிடிக்கும்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிப்பீட் காட்சிகள் சிலருக்கு புரியவில்லை என்றும் கமெண்ட்டுகள் வருகின்றன.
படத்தில குறைனு சொல்றதுக்கு ஒன்னும் இல்ல loop Movie இப்பிடி தான் இருக்கும். படம் பாக்குற பொறுமை இருக்கவங்களுக்கு கண்டிப்பா படம் பிடிக்கும் ⭐⭐⭐⭐⭐#Maanaadu #MaanaaduFDFS
— Gєσяgє❁ (@itsgeorgeoff) November 25, 2021
மாநாடு படத்தின் முதுகெலும்பு
மாநாடு திரைப்படத்தின் மிக முக்கியமான முதுகெலும்பே அந்த படத்தின் எடிட்டர் பிரவின் கே.எல். தான் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர். எடிட்டிங் சொதப்பி இருந்தால் படம் இந்த வெற்றியை பெற்றிருக்காது என்பது தான் உண்மை என்கின்றனர்.
Backbone of #Maanaadu is undoubtedly the Editor - Praveen KL. His 100th film, VP’s Main Pillar.
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 25, 2021
Great Work. Well Done 👏👏👏 pic.twitter.com/dHiUZ2F9Ds
எஸ்.ஜே. சூர்யா இன்ட்ரோ
மனோஜ் பாரதிராஜா செல்போன் பேசியபடியே திரும்பி பார்க்க காரில் இருந்து சும்மா கெத்தாக இறங்கும் எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடி இன்ட்ரோ மற்றும் யுவன் பிஜிஎம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
#Maanaadu #SJSuriya pic.twitter.com/0ASrCMCLBM
— Kevin (@naaorualien) November 25, 2021
எடிட்டர் பிரவினுக்கு இது 100வது படம்
டைம் லூப் என்பதால் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான காட்சிகள் இடம்பெறும் நிலையில், ரசிகர்களை குழப்பாமல் சரியாக எடிட் செய்த எடிட்டர் பிரவினுக்கு மாநாடு 100வது படம் என அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Gotta give lot of credit to @Cinemainmygenes 👏
— Harish Ravisundar (@harish_ravi21) November 25, 2021
For a time loop concept, cuts should be on point. Glad that @vp_offl went with Praveen brother. 100th film couldn't be much perfect than this. Challenging and marvelous 💥💥💥💥#மாநாடு #MaanaaduFrom25thNovember #Maanaadu
மங்காத்தாவிற்கு பிறகு
தல அஜித்தின் மங்காத்தா படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் திரைக்கதை ரீதியாக தரமாக உள்ளது தான் இந்த படத்திற்கு கிடைத்த வெற்றி என பாராட்டி வருகின்றனர்.
#Maanaadu: Post Mankatha, this is another gamechanger by @vp_offl, who has tried something audacious - enjoy his timeloop fantasy magic@SilambarasanTR_ ultimate comeback@iam_SJSuryah woos the masses bigtime with his histrionics
— Kaushik LM (@LMKMovieManiac) November 25, 2021
Pretty @kalyanipriyan in an enthu, likable part
சிம்புவுக்கு 100 கோடி வசூல் வருமா?
சிம்புவின் மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிம்புவின் முதல் 100 கோடி வசூல் திரைப்படமாக மாநாடு மாறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
As Expected #Maanaadu Getting Highly Positive Reviews From Viewers. And #STR Back In His Own Style.
— I'm Vishal (@ImVishal_45) November 25, 2021
2nd ₹50 CR Loading, May Be The 1st ₹100 CR Too... 👍#MaanaaduFDFS #SilambarasanTR#Simbu
pic.twitter.com/D6fmfSwNCl
இடைவேளை சூப்பர்
மாநாடு படத்தின் இன்டெர்வல் பிளாக் சூப்பராக இருப்பதாக ஃபயர் விட்டு வருகின்றனர் ரசிகர்கள்.
intervaL Block 💥💥 #Maanaadu
— Mᴀsᴛᴇʀ Nᴀʙɪʟ ✨ (@MasterNabil1) November 25, 2021
Worth uh worth uh worth uh 💯 pic.twitter.com/8p6BA76xtz
மயிலாட்டம்
மேள தாளங்கள் முழங்க பாரம்பரிய நடனமான மயிலாட்டம் உள்ளிட்டவரை அரங்கேற சிம்புவின் மாநாடு படம் திரையரங்குகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தடுப்பூசி போடாதவர்களுக்கும் அனுமதி?
தடுப்பூசி போடாதவர்கள் தியேட்டர் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல அனுமதி கிடையாது என அரசு அறிவித்த நிலையில், மாநாடு திரைப்படத்தை தடுப்பூசி போடாத் இளைஞர்களும் பார்த்து வருவதாக ட்வீட் போட்டு வருகின்றனர்.
தியேட்டர்ல Vaccination இன்னும் போடலன்னு சொன்னேன் பரவாயில்லை தம்பி @thisisysr music a 100 vaccine க்கு சமம்ன்னு சொல்லி உள்ள அனுப்பிட்டாங்க 🤩 @Premgiamaren @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah #Valimai #Maanaadu
— Marees Pandiyan ツ (@Mareespandiyan) November 25, 2021
புஷ்பா புரமோஷன்
சிம்புவின் மாநாடு பட இன்டெர்வெலில் புஷ்பா படத்தின் டீசர் காட்சியை வெளியிட்டு புரமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
Our upcoming release #PushpaTheRiseOnDec17 in #RamCinemas #DolbyAtmos #RGBLaser @alluarjun @iamRashmika pic.twitter.com/sygjvjn7IT
— Ram Muthuram Cinemas (@RamCinemas) November 25, 2021
சூரசம்ஹாரத்துக்கு கூட
”திருச்செந்தூர் கிருஷ்ணா தியேட்டர் வாசல்ல நின்னுகிட்டு இருந்தேன். கூட்டத்த பாத்து ஒருத்தர் வந்து என்ன தம்பி சூர சம்ஹாரத்துக்கு கூட இவளோ கூட்டம் கூடலயேப்பா'ன்னு சொல்லிட்டு போறாரு.” என சிம்பு ரசிகர் ஒருவர் ட்வீட் போட்டுள்ளார்.
திருச்செந்தூர் கிருஷ்ணா தியேட்டர் வாசல்ல நின்னுகிட்டு இருந்தேன்.
— மாநாடு மதன் 🔁 (@Being_Mathan) November 25, 2021
கூட்டத்த பாத்து ஒருத்தர் வந்து என்ன தம்பி சூர சம்ஹாரத்துக்கு கூட இவளோ கூட்டம் கூடலயேப்பா'ன்னு சொல்லிட்டு போறாரு.#MaanaaduFDFS #Maanadu #மாநாடு
யோகி பாபு பாராட்டு
STR செம என மாநாடு படத்தை பாராட்டி நகைச்சுவை நடிகர் யோகி பாபு ட்வீட் போட்டுள்ளார்.
STR SEMA @SilambarasanTR_ @vp_offl pic.twitter.com/Zv6lbJ99dm
— Yogi Babu (@iYogiBabu) November 25, 2021
நிறைய பேர் தடுப்பூசி போடுவாங்க
”தடுப்பூசி போடத் தயக்கம் காட்டியவங்க கூட மாநாடு பாக்க கூட்டம் கூட்டமா போய் தடுப்பூசி போட்டுகிட்டு வந்து டிக்கெட் புக் பண்ணுறாங்க. இந்த வாரம் வரலாறு காணாத அளவு தடுப்பூசி போட்டுக் கிட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. சிம்பு நீ நடிகனுக்கு மேல்” என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தடுப்பூசி போடத் தயக்கம் காட்டியவங்க கூட மாநாடு பாக்க கூட்டம் கூட்டமா போய் தடுப்பூசி போட்டுகிட்டு வந்து டிக்கெட் புக் பண்ணுறாங்க. இந்த வாரம் வரலாறு காணாத அளவு தடுப்பூசி போட்டுக் கிட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. சிம்பு நீ நடிகனுக்கு மேல். #Maanadu#மாநாடு
— Mr. (@_frondeur_) November 25, 2021
வெங்கட் பிரபு பிஸி ஆகிடுவாரு
மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் புதிதாக கதை கேட்க முன்னணி நடிகர்கள் போட்டிபோடுவார்கள் என மீம் எல்லாம் வைரலாகி வருகிறது.
sir @vp_offl unga reply?! 😝#MaanaaduBlockBuster #Maanaadu #prettykollywood #மாநாடு #MaanaaduFDFS pic.twitter.com/e9JLUd08Tv
— Pretty Kollywood ᵐᵃᵃⁿᵃᵃᵈᵘ (@prettykolly) November 25, 2021
தியேட்டர்களில் தீபாவளி
மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அந்த படம் ரிலீஸ் ஆன இன்று திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் அணிவகுத்து தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.
Not often u see Ppl who Exiting from Movie ... CELEBRATING @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @sureshkamatchi @thisisysr @Premgiamaren ... U ALL MADE IT HAPPEN.. #மாநாடு #Maanadu .. Blockbuster Hit pic.twitter.com/5ESzrez9Mo
— prady (@Iam_prady) November 25, 2021
மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி
”நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறியுள்ளார்.
நானே எதிர்பார்க்காத தடங்கல் #மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்..
— sureshkamatchi (@sureshkamatchi) November 25, 2021
மல்டிபிளக்ஸ் திரையரங்கிலும் ரிலீஸ்
பொறுத்தது போதும் TPV மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் வெளியானது. பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் இன்னமும் பல இடங்களில் படம் வெளியாகவில்லை.
The wait is over! @SilambarasanTR_’s #Maanaadu begins 🔥
— TPV Multiplex (@TPVMultiplex) November 25, 2021
A @vp_offl politics 🤙#MaanaaduAtTPVMultiplex 💥 pic.twitter.com/v2JuPdAZ2e
தடுப்பூசி
மாநாடு திரைப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்க கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டேன் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Vaccinated to watch #Maanaadu 🙏
— Cool Suresh (@maannniiiiiiii) November 25, 2021
நடனமாடிய விஜய் ரசிகர்கள்
தியேட்டரில் சிம்பு ரசிகர்களை விட நாங்க தான் டான்ஸ் ஆடினோம். அந்த அளவுக்கு படம் சூப்பர். சிம்புவுக்கு நல்ல கம்பேக் என விஜய் ரசிகர்கள் பாராட்டிய வீடியோ க்ளிப்புகள் வைரலாகி வருகின்றன.
🎯#Maanaadu #MaanaaduFDFS @SilambarasanTR_ pic.twitter.com/xAfW5QHF88
— Tharun (@tharunofficial_) November 25, 2021
எஸ்.ஜே.சூர்யாவுக்கு மற்றொரு மகுடம்
ஸ்பைடர், மெர்சல் படங்களை மிரட்டியதை போலவே மாநாடு படத்தில் தனுஷ் கோடி கதாபாத்திரத்தில் நடிப்பால் அசத்தி உள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கு இன்னொரு மகுடம் கிடைத்துள்ளது என பாராட்டி வருகின்றனர்.
#Maanaadu - Performance wise the stage is set by @SilambarasanTR_ and every single scene is elevated to a different level by @iam_SJSuryah #SJS will have this as one more feather after #Spyder, #Mersal and #NenjamMarapathillai pic.twitter.com/CJ8WypuUzd
— Jeya Suriya (@MSPMovieManiac) November 25, 2021
யுவன் சிம்பு காம்போ
யுவன் மற்றும் சிம்பு காம்போவில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிம்புவுக்கு பெரிய வெற்றியை கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
யுவன் + சிம்பு காம்போ 😍🔥#Maanaadu #Yuvan #Simbu pic.twitter.com/qWrBgZsiWo
— @Abdul_khaaliq ᵁ¹ (@Abdulkhaaliq_U1) November 25, 2021
டிக்கெட் புக் பண்ணுங்க
மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட். உங்களுடைய டிக்கெட்டுகளை தாராளமாக புக் பண்ணலாம் என யூடியூப் விமர்சகர் பிரசாந்த் பதிவிட்டுள்ளார்.
#Maanaadu - Blockbuster. Book your tickets.
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 25, 2021
செகண்ட் ஹாஃப் எப்படி இருக்கு?
படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் இரண்டாம் பாதி ஓரளவுக்கு இருந்தாலே படம் ஓடிவிடும் என நினைத்த நிலையில், இரண்டாம் பாதி இரண்டு மடங்காக இருபதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
After 1st half my thoughts "2nd half Indha alavuku irundhaaley padam hit aairum"
— Srini 🐦 (@im_srini3348) November 25, 2021
After watching 2nd half "Rendu madangu Ku iruku 2nd half"
Theatres blasting 🔥🔥#Maanaadu
தடை அதை உடை
காலை 8 மணி காட்சிகள் சில திரையரங்குகளில் வெளியான நிலையில், பல திரையரங்குகளில் 11 மணிக்கு முதல் காட்சி வெளியாகி உள்ளது.
#maanaadu தடை அதை உடை புது சரித்திரம் படை pic.twitter.com/o805OJIebx
— Thirunavukarasu karuppiyan (@thiruna18987352) November 25, 2021
கடைசி வரை ட்விஸ்ட்
கடைசி நொடி வரை ரசிகர்களை சீட்டின் நுனியிலே அமர வைத்து உருவாக்கப்பட்டுள்ளது மாநாடு திரைப்படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Worthful Making of Film..keeping Audience in edge of the seats till the last second 🔥🔥
— CHENTHUR (@ck__tweetz) November 25, 2021
GOAT Comeback 💥 @SilambarasanTR_ @iam_SJSuryah as DHANSUHKodi 😂👌
A time loop success 💯
Congrats Team 👏 " #Maanaadu "@vp_offl @thisisysr @sureshkamatchi pic.twitter.com/bz8yxHOlii
விஜய் ரெஃபரன்ஸ்
மாநாடு படத்தில் விஜய்யின் சர்கார் பட ரெஃபரன்ஸ் உள்ளதாக ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர். ஆனால், தல அஜித் ரெஃபரன்ஸ் இல்லாதது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.
Vijay Reference also, but no thala ajith reference, throgi simbu. #நன்றிமறந்தசிம்பு #Maanaadu #MaanaaduFlop
— Kadavulin Mafia™ (@murattuveriyan) November 25, 2021
பாடல்கள் சொதப்பல்
வின்டேஜ் சிம்பு திரும்பவும் வந்துட்டாரு.. ஒவ்வொரு சீனும் மாஸாக வொர்த்தாக உள்ளது. யுவன் இசையில் பிஜிஎம் மிரட்டினாலும் பாடல்கள் சொதப்பல் தான் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
#Maanaadu vintage is simbu is back full of mass cant even avoid 1second of movie .. songs are little worry.. but the screenplay life time mass is guarentee 🚩 pic.twitter.com/oFhQVyQpF0
— jackie: roads (@jack_is_mee) November 25, 2021
நெகட்டிவிட்டி ஏன்
”#Maanaadu படம் நல்லாருந்தா அத மட்டும் சொல்லுங்கடா அத விட்டுட்டு தனுஷ் கெரியர் அவ்வளவுதான் சிவாகார்த்திகேயன் கிரேஸ் அவ்வளவுதானு ஏன்டா ட்விட் போட்றீங்க” என தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#Maanaadu படம் நல்லாருந்தா அத மட்டும் சொல்லுங்கடா அத விட்டுட்டு தனுஷ் கெரியர் அவ்வளவுதான் சிவாகார்த்திகேயன் கிரேஷ் அவ்வளவுதானு ஏன்டா ட்விட் போட்ரிங்க 🤐🤐🤐
— வெற்றி மாறன் 2.0 (@Vetri_Maaran2) November 25, 2021
மாநாடுக்கு அடுத்த தடையாக மாறிய மழை
சிம்புவின் மாநாடு திரைப்படம் பல தடைகளை கடந்து காலையில் ஸ்பெஷல் ஷோ பல இடங்களில் ரத்து செய்யப்பட்டு பின்னர் 8 மணிக்கு முதல் காட்சி ரிலீசான நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
ஜெயிச்சிட்டோம் தலைவா
”ஜெயிச்சிட்டோம் தலைவா @SilambarasanTR_.. வேற மாறி ஹிட்..” என மாநாடு வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயிச்சிட்டோம் தலைவா @SilambarasanTR_.. வேற மாறி ஹிட்..✨
— Manimaran (@Mani_Maran07) November 25, 2021
Thank you @vp_offl sir @sureshkamatchi sir @Premgiamaren sir @thisisysr sir @Cinemainmygenes sir #Maanaadu #MaanaaduFDFS #Simbu pic.twitter.com/owbj6iUu4f
இயக்குநர் பா. ரஞ்சித் பாராட்டு
படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன் என இயக்குநர் வெங்கட் பிரபுவை பாராட்டி வாழ்த்தி உள்ளார் பா. ரஞ்சித்.
All the best sir .. I’m sure it’s rocks 😍😊💐 https://t.co/W6wuBHEVzV
— pa.ranjith (@beemji) November 25, 2021
சிம்புவை வாழ்த்திய இசையமைப்பாளர் தமன்
சிம்புவின் UNSTOPPABLE டைம் ஆரம்பமானது. எனது நண்பன் சிம்புவுக்கு மாநாடு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என நம்புகிறேன் என இசையமைப்பாளர் தமன் ட்வீட் போட்டுள்ளார்.
His UNSTOPPABLE TIME STARTS FROM TODAY
— thaman S (@MusicThaman) November 25, 2021
Wishing My #NANBAN #ATMAN @SilambarasanTR_ #STR 🤘🏽🏆💃
AND #Maanadu
MOVIE TEAM
A HUGE
SUCCESS💃🥁💿💿💿🏆 pic.twitter.com/woj6OFGPlb
எஸ்.ஜே. சூர்யா மிரட்டல்
எஸ்.ஜே. சூர்யா சார் ஃபன் பண்றீங்க என பிரபல யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யா அந்த ட்வீட்டை லைக் செய்துள்ளார்.
Sir @iam_SJSuryah - Fun panreenga sir ! #Maanaadu
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 25, 2021
மாநாடு ரிலீஸ் - நடிகர் சூர்யா வாழ்த்து
மாநாடு திரைப்படம் தடைகளை தாண்டி வெளியான நிலையில், பல சாதனைகளை படைக்க நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
All the best!!! Let it break all records!!!👊🏽 https://t.co/XCdqq1Yp8L
— Suriya Sivakumar (@Suriya_offl) November 25, 2021
தொண்டை வலிக்குது
தியேட்டர்ல கத்தி கத்தி தொண்டை கிழிஞ்சு போச்சு... எனக்கும் கழுதைக்கும் வித்தியாசமே தெரில... இது #மாநாடு நீ வழிய விடு! என சிவகார்த்திகேயன் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
தியேட்டர்ல கத்தி கத்தி தொண்டை கிழிஞ்சு போச்சு... எனக்கும் கழுதைக்கும் வித்தியாசமே தெரில...
— லோகி (@Sivahere_123) November 25, 2021
இது #மாநாடு நீ வழிய விடு🔥🔥🔥#Maanadu#சிம்புஅண்ணா #simbufever#சிம்புஆர்மி💪
சில பல குறைகள்
Time loop-தானனு எதிர்பார்த்து போறவங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. வேற லெவல் ஸ்க்ரீன் ப்ளே. சிலபல குறைகள் இருந்தாலும் மொத்தமாக நல்லா இருக்கு என இந்த ரசிகர் ரிவ்யூ போட்டுள்ளார்.
#மாநாடு
— லோகி (@Sivahere_123) November 25, 2021
Time loopதானனு எதிர்பாத்துனு போறவங்களுக்கே பெரிய surprise இருக்கு. வேற level screen play. STR simply steals the show. VP's best & equal to Mankatha. Yuvan BGM 🔥🔥 சிலபல குறைகள் இருந்தாலும் overall super hit material. Repeat audience confirmed #Maanaadu #Simbu #சிம்பு
கால பைரவர்
டைம் லூப் படத்திற்கு வித்தியாசமான அறிவியல் காரணங்களை ஏகப்பட்ட ஹாலிவுட் பட இயக்குநர்கள் கூறி வந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு கால பைரவர் கான்செப்ட்டை பயன்படுத்தி உள்ளார் என ஸ்பாய்லர்களையும் சொல்லி வருகின்றனர்.
HW Directors Claiming Different Scientific Theories for Time Loop Concept
— Aravind Prakash (@Aravind360) November 25, 2021
Meanwhile VP na - பைரவர் பெயர்ல கால பைரவர் பெயர்ல எழுதுங்கோ..#மாநாடு #Maanaadu pic.twitter.com/hzrxhB6z6v
விஜய், அஜித் ரசிகர்கள் பாராட்டு
”நம்ம பசங்க படம் எப்படி வந்தாலும் நல்லாருக்குன்னு சொல்லுவானுங்க.. ஆனா விஜய், அஜித் பேன்ஸே செமயா இருக்குன்னு சொல்லிருக்காங்க.. இந்த நாளுக்குதான் வெயிட்டிங்... ” என சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நம்ம பசங்க படம் எப்படி வந்தாலும் நல்லாருக்குன்னு சொல்லுவானுங்க.. ஆனா விஜய், அஜித் பேன்ஸே செமயா இருக்குன்னு சொல்லிருக்காங்க..
— Porselvan S (@porselvanbe) November 25, 2021
இந்த நாளுக்குதான் வெயிட்டிங்... #மாநாடு pic.twitter.com/8CMALzdFv4
சிம்பு என்ட்ரியை மொபைலில் படம் பிடித்த ரசிகர்கள்
சேலம் திரையரங்கில் மாநாடு படத்தில் சிம்புவின் அறிமுக காட்சியை அத்தனை ரசிகர்களும் தங்களின் ஸ்மார்ட் போன் கேமரா மூலம் படம் எடுத்துக் கொண்ட காட்சி வைரலாகி வருகிறது.
#maanaadu #MaanaaduFrom25thNovember #Manaadu #MaanaaduFDFS #SilambarasanTR #Simbu #Valimai #ValimaiPongal
— bhuvanesh (@ruderbaddie) November 25, 2021
Simbu intro in salem pic.twitter.com/m2Ov3KRGEX
சிம்புவுக்கு சரியான கம்பேக்
சில தோல்விகளுக்கு பிறகு நடிகர் சிம்புவுக்கு மாநாடு படம் சரியான கம்பேக்காக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு மிரட்டி உள்ளார் என தனுஷ் ரசிகர்களே பாராட்டி வருகின்றனர்.
#Maanaadu #Simbu #maanaduFDFS #Maanadu 1st half over..!!
— DHANUSH ⚡ (@DhanushNadar) November 25, 2021
Purely @SilambarasanTR_ is back @iam_SJSuryah is major possitive in a movie...@vp_offl took a challenge and he is done it at its best waiting for 2nd half eagerly.. pic.twitter.com/MQ93LnSTpZ
தெளிவான ஸ்க்ரீன்ப்ளே
எல்லாருக்கும் புரியும் படி டைம் லூப் கான்செப்ட் முதல் பாதியில் தீயாய் இருக்கிறது. இரண்டாம் பாதியும் சூடு பறக்கிறது என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
மாநாடு first half 🔥🔥🔥 எல்லாருக்கும் புரியுற மாதிரி Time Loop a செஞ்சுட்டாய்ங்க..🔥🔥🔥 Wat a Screenplay...🔥🔥 & Yuvan BGM🔥🔥🔥 Waiting for Second half..🔥
— மருத்துவ மைனர் (@iam_DrAjju) November 25, 2021
And yeah.. of course.. STR.. the Real Mass...🔥🔥🔥#Maanaadu
டைம் லூப்
டைம் லூப் கான்செப்ட்டில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் அந்த கான்செப்டில் கச்சிதமாக செல்வதாக ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
Kokka makka..
— NP sTr (@NPavithran609) November 25, 2021
.
...
The loop ...
It's something big #Maanaadu #SilamabarasanTR Thalaiva You only can do it........ pic.twitter.com/X3zG3HlJaV
முதல் பாதி சூப்பர்
முதல் பாதியில் கதையை பில்ட் பண்ணிட்டு.. இன்டெர்வலில் ட்விஸ்ட் வச்சிருக்காரு வெங்கட் பிரபு. முதல் பாதி சூப்பர் என ரசிகர்கள் ரிவ்யூ சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
First halfla kathaya built panitu intervala @vp_offl vachaaru paaru twistu💥... waiting for 2nd half🔥@SilambarasanTR_ 🔥@iam_SJSuryah sir double nerupu🔥🔥#MaanaaduFDFS #Maanaadu
— PEARL_PRABHA (@KaKaRoT_AUI) November 25, 2021
கட்டுக்கடங்காத கூட்டம்
கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டர்ல.. அப்பரேட்டர் ரூமில் கூட 5 பேர் நின்னு படம் பார்க்குறாங்க என சிம்பு ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் தியேட்டர்ல, ஆப்ரேட்டர் ரூம்ல கூட அஞ்சு பேரு நின்னு படம் பாக்குறாங்க🙏#Maanaadu #Maanaadu #MaanaaduFDFS
— மாநாடு வாட்சு 💔 (@0_watts_) November 25, 2021
மரண மாஸ் பிஜிஎம்
தல அஜித்தின் மங்காத்தா படத்தை விட மாநாடு படத்திற்கு மாஸ் பிஜிஎம் போட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. சிம்புவின் என்ட்ரியை போல எஸ்.ஜே. சூர்யா என்ட்ரிக்கும் செம பிஜிஎம்.
#Maanaadu
— Rajesh (Fishu Akka) (@RajeshGayle333) November 25, 2021
He We Go Most Awaited Intro Of @iam_SJSuryah Sir 👌👌👌 Marana Mass BGM By @thisisysr Sir @SilambarasanTR_ @vp_offl @MahatOfficial #maanaduFDFS pic.twitter.com/eNCrTGQix1
சிம்புவின் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த தனுஷ் ரசிகர்கள்
Best wishes to our @SilambarasanTR_ for #Maanaadu a Grand sucess 🤝♥️ @dhanushkraja #Dhanush #DhanushFansStandWithSTR #Yuvan #SilambarasanTR pic.twitter.com/uUODWZk8rY
— Always Dhanush In Our Hearts (@Dhanush_ADIOH) November 25, 2021
மாநாடு டைட்டிலே தெறிக்குது
மாநாடு படம் திரையரங்குகளில் பல தடைகளை தாண்டி வெளியான நிலையில், STR பெயர் திரையில் தோன்றியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#மாநாடு 💪😘 Best Opening ...
— 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐢 𝗥𝗧𝗞 (@iam_Tharani) November 25, 2021
எங்க ஆட்டம் ஆரம்பம்...
#SilambarasanTR 🔥🙌🥁❤️
💪🙏🙏🙏🙏 @SilambarasanTR_ @vp_offl@thisisysr @sureshkamatchi#Maanaadu #MaanaaduFDFS#maanaduFDFS #Maanadu pic.twitter.com/kBgScuiJoG
மாநாடு தாமதம் பற்றி மதன் கெளரி ட்வீட்
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு மிகவும் ரிலீஸ் தாமதமாகும் இரண்டு படங்கள் என்றால் அது மாநாடு மற்றும் வலிமை தான் என யூடியூபர் மதன் கெளரி ட்வீட் போட்டுள்ளார்.
Two movies with maximum expectations and maximum delays! #Maanadu and #Valimai 🙄
— Madan Gowri (@madan3) November 24, 2021
அப்துல் காலிக்காக சிம்புவின் என்ட்ரி வெறித்தனமா இருக்கு.. திரையரங்கில் வெளியானது மாநாடு ரசிகர்கள் உற்சாகம்.
#மாநாடு #AbdulKhaaliq #SilambarasanTR 🔥🙌🥁❤️ Entry.... Verithanama iruku... Love you Thalaivaaaaaaa.. 🔥🙌🥁❤️❤️@SilambarasanTR_ @vp_offl@thisisysr @sureshkamatchi#Maanaadu #MaanaaduFDFS#maanaduFDFS #Maanadu pic.twitter.com/MrKz8wCZ1V
— 𝐓𝐡𝐚𝐫𝐚𝐧𝐢 𝗥𝗧𝗞 (@iam_Tharani) November 25, 2021
தீபாவளி ரிலீசாக மாநாடு திரைப்படம் அறிவிக்கப்பட்டு பின்னர் நவம்பர் 25ம் தேதி படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
மீண்டும் ரிலீஸ் தள்ளிப் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதாக இயக்குநர் வெங்கட் பிரபு அறிவித்தார்.
அதிகாலை காட்சிகள் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சற்று தாமதமாக படம் வெளியாகி உள்ளது.