'ஈஸ்வரன்' முடிந்ததும் 'மாநாடு'க்கு சென்ற நடிகர் சிம்பு.. புதுச்சேரியில் இன்று ஷூட்டிங் தொடக்கம்!

By

சென்னை: சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங், புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது.

Recommended Video

STR Eashwaran Shooting எத்தனை நாள்? Suresh Kamatchi Exclusive

வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார் நடிகர், சிம்பு. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

பிரியதர்ஷன், லிஸி

பிரியதர்ஷன், லிஸி

இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' படங்களைத் தயாரித்தவர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் இயக்குனர் பிரியதர்ஷன், லிஸி தம்பதியின் மகள். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

வில்லன் எஸ்.ஜே.சூர்யா

வில்லன் எஸ்.ஜே.சூர்யா


மலையாளத்திலும் நடித்துள்ள இவர், தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக, ஹீரோ படத்தில் நடித்திருந்தார். சுதா கொங்கரா இயக்கிய ஆந்தாலஜி படம் ஒன்றிலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பரவிய கொரோனா

பரவிய கொரோனா

இதில், அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார், சிம்பு. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. ஈசிஆர் அருகே பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. பின்னர் ஐதராபாத்தில் ஷூட்டிங் நடந்தபோதுதான், கொரோனா பரவல் அதிகரித்தது.
இதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

குறுகிய கால ஈஸ்வரன்

குறுகிய கால ஈஸ்வரன்

இதற்கிடையே நடிகர் சிம்பு, குறுகிய காலத்தில் உருவாகிய ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த 6 ஆம் தேதி முடிவடைந்தது. இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.

புதுச்சேரியில் இன்று

புதுச்சேரியில் இன்று

இந்நிலையில், மாநாடு படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இதில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். அங்கு தொடர்ந்து 40 நாட்கள் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X