டெனெட் பாதிப்பா.. ரீவைண்டில் மிரட்டும் சிம்புவின் மாநாடு டீசர்.. ஒவ்வொரு ஃபிரேமும் தரம்!

சென்னை: நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

STR பர்த் டே.. தெறிக்கவிடும் மாநாடு டீசர்… 5 மொழிகளில் அட்டகாசம்!

தமிழ் டீசரை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி டீசர்களை ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

அரசியல் படமா?

அரசியல் படமா?

மாநாடு என்கிற டைட்டில் மற்றும் வெங்கட் பிரபுவின் அரசியல் படம் என்கிற அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் மாநாடு படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என்றும், சிம்பு அரசியல் தலைவராக இருப்பார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால், படத்தில் அப்துல் காலிக் என்கிற ரோலில் சிம்பு நடித்திருப்பதை பார்த்தால், அரசியலையும் தாண்டிய விசயங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.

டெனெட் பாதிப்பா

டெனெட் பாதிப்பா

கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி இன்னமும் பலரையும் பலவிதமாக டீகோட் செய்ய வைத்து வருகிறது அந்த படம். முழுக்க முழுக்க ரிவர்ஸ் டெக்னாலஜியை கொண்டு அந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள சிம்புவின் மாஸ்டர் திரைப்படமும் ரீவைண்ட் டீசராக வெளியாகி ரசிகர்களை கன்ஃப்யூஸ் செய்துள்ளது.

டைம் மெஷின் படமா

டைம் மெஷின் படமா

மாநாடு திரைப்படம் அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள டீசர் முழுக்க முழுக்க ரீவைண்ட் மோடில் வெளியிடப்பட்டு இருப்பது ரசிகர்களை மேலும் குழப்பி இருக்கிறது. டைம் மெஷின் படமா? இந்த படம் என்கிற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.

எல்லாமே ரிவர்ஸ்

எல்லாமே ரிவர்ஸ்

கார் ரிவர்ஸில் செல்வது, துப்பாக்கிக்குள் புல்லட் வருவது, (அதே தானடா.. அதே தான்) என ஏகப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டீசரை ட்விஸ்ட்டாக கொடுக்க வேண்டும் என்பதற்காக ரீவைண்ட் செய்திருக்கிறாரா? இல்லை படத்தில் இந்த ரீவைண்ட் போர்ஷன் முக்கிய பங்கு வகிக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ரஹ்மானுக்கு நன்றி

ரஹ்மானுக்கு நன்றி

மாநாடு டீசரை உலகறியச் செய்த இசையுலகின் நாயகனுக்கு நன்றி என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். எஸ்.ஜே. சூர்யா, மனோஜ் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே டீசரில் இடம்பெற்றுள்ளனர். படத்தில் இன்னும் நிறைய பெரிய தலைகள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் வித்தியாசமான பின்னணி இசை பலம்.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசர் தற்போது அனைத்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. பான் இந்திய படமாக வெளியாகவுள்ள இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், சிம்பு ரசிகர்கள் #MaanaaduTeaser என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த மாத இறுதியில் படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற உள்ள நிலையில், மே மாதம் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X