2021லும் சிம்பு தான் மன்மதன்.. புதுப்பொலிவுடன் தியேட்டரில் ரிலீஸ்.. டிரெண்டாகும் #SilambarasanTR
சென்னை: நடிகர் சிலம்பரசனின் மன்மதன் திரைப்படம் இன்று மீண்டும் திரையரங்குகளில் புத்தம் புதிய பொலிவுடன் வெளியாகி உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் திரைக்கதையில் உருவான திரைப்படம் மன்மதன்.
சிம்புவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, சிந்து துலானி, அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
மன்மதன் சிம்பு
கடந்த 2004ம் ஆண்டு நடிகர் சிம்பு திரைக்கதை எழுதி, இயக்குநர் ஏ.ஜே. முருகன் இயக்கிய திரைப்படம் மன்மதன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்தார். மேலும், சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம், மந்திரா பேடி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

டபுள் ஆக்ஷன்
நடிகர் சிம்பு இந்த படத்தில் தான் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. நடிகர் சிம்புவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாகவும் மன்மதன் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரிலீஸ்
இந்நிலையில், சிம்புவின் மன்மதன் திரைப்படம் நவீன டிஜிட்டல் முறையில் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளன. அதனை முன்னிட்டு சிம்பு ரசிகர்கள் #SilambarasanTR எனும் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

2021லும் சிம்பு தான் மன்மதன்
உடல் எடை அதிகரித்து விட்டது, படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார் என்கிற ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சிம்பு மீது வைக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் தனது ரசிகர்களுக்காக உடல் எடையை குறைத்து ஒரே மாதத்தில் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்து, அடுத்து மாநாடு, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் என மிகப்பெரிய லைன் அப்பை வைத்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் 5
மேலும், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கவும் நடிகர் சிம்புவிடம் தீவிர பேச்சுவார்த்தைகளை விஜய் டிவி நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது சமூக வலைதளங்களில் நடிகர் சிம்பு வெளியிடும் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு எல்லாம் லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











