என்ன மனுஷன்யா.. மண்ணில் படுத்து உறங்கிய சிம்பு.. மேன் ஆஃப் சிம்ப்ளிசிட்டி என புகழ்ந்த இயக்குநர்!
சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரவு நேர படப்பிடிப்பில் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க நினைத்த நடிகர் சிம்பு, மண்ணிலேயே படுத்து தூங்கிய புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, இந்த போட்டோக்களை ஷேர் செய்து Man of Simplicity என்றும் பாராட்டி உள்ளார்.

தூங்கிடுறாரு
படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வராமல் தூங்கிடுறாரு சிம்பு என கிண்டல் செய்யப்பட்ட சிலம்பரசன் இப்போ இரவு பகலாக மாநாடு படப்பிடிப்பு தளத்திலேயே தனது முழு உழைப்பையும் கொட்டி வருவதை கண்டு ரசிகர்கள் வியந்து வருகின்றனர். சிம்புவை வைத்து படம் பண்ணினால் பல வருடங்கள் ஆகும் என்கிற விமர்சனங்களை ஒரே மாதத்தில் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்து பதிலடி கொடுத்திருந்தார்.

முழு வீச்சில்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் மாநாடு படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. படம் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இஸ்லாமிய இளைஞர்
அரசியல் படமாக உருவாகி வரும் மாநாடு படத்தில் நடிகர் சிம்பு அரசியல்வாதியாக நடிப்பார் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திர பெயர் வெளியான நிலையில், ஒரு பெரிய அரசியல் மாநாட்டை எதிர்க்க போகிறார் என தெரிகிறது.

மண்ணில் படுத்த சிம்பு
பொதுவாக ஹீரோக்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் சொகுசு வாய்ந்த கேரவன் இருக்கும். மாநாடு படத்திற்காக பிரம்மாண்ட செட் போட்டுள்ள நிலையில், பகல் இரவாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நள்ளிரவிலும் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், கேரவன் வரை சென்று படுத்து உறங்கி நேரத்தை விரயமாக்க வேண்டாம் என நினைத்த சிம்பு, துணை நடிகர்களுடன் மண்ணிலேயே படுத்து உறங்கிய போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

சிம்புவை எழுப்பிய சூர்யா
மாநாடு படத்தின் நாயகன் சிம்பு மண்ணில் படுத்திருப்பதை பார்த்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா விரைந்து அங்கே வந்து என்ன சார் என விசாரிக்கும் போட்டோக்களும் வெளியாகி உள்ளன. அதெல்லாம் ஒன்னுமில்லை, சும்மாதான் படுத்திருக்கேன் என சிம்பு சொல்லி சமாளித்தது இயக்குநர் வெங்கட் பிரபு காதுக்கும் எட்டி விட்டது.

இயக்குநர் பாராட்டு
சிம்புவின் இந்த செயலை அறிந்த இயக்குநர் வெங்கட் பிரபு, புகைப்படக் கலைஞர்கள் க்ளிக் செய்த அந்த போட்டோக்களை ஷேர் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு Man of Simplicity என பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது. மேலும், #SilambarasanTR என்கிற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











