Arasan: தடைகளை உடைத்த அரசன் STR.. மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.. சிம்பு ஷேர் செய்தது மாஸா இருக்கேப்பா!
சென்னை: நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது ஏற்கனவே இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தின் கதைக்களம் நடைபெறும் போது நடக்கும் மற்றொரு கதை என்று பேச்சுக்கள் அடிபடுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக இயக்குநர் வெற்றி மாறன் இந்த படத்தை வட சென்னை படத்துடன் தொடர்பு படுத்தியும் படமாக்க முடியும், அது இல்லாமலும் படமாக்க முடியும் என்று கூறி இருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் இருந்து நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை என பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் சிம்பு என இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைந்து பணியாற்றி வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துள்ளது.

படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் சில பிரச்னைகளால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு தற்போது படப்பிடிப்பு பணிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படக்குழு தரப்பில் வெளியிடப்பட்ட ப்ரோமோவில் சிம்பு இரண்டு வகையான கெட்-அப் களில் இருந்தார். இதுவே ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
அரசன்: அப்படி இருக்கையில் முதற்கட்ட படப்பிடிப்பிலும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் சிம்பு முற்றிலும் வேறு வேறு கெட்-அப் களில் இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தில் செம்ம விஷுவல் ட்ரீட் இருக்கும் என்பது உறுதி ஆகி உள்ளது. அதேபோல், படத்தில் விஜய் சேதுபதி உள்ளிட்ட மற்ற முன்னணி நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரச்னை முடிந்து: ஏற்கனவே கூறியது போல படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாவது கட்ட படப்பிடிப்பின் போதுதான் படப்பிடிப்பு சில காரணங்களால் ரத்தானது. ஆனால் தற்போது, அந்த பிரச்னைகள் முழுவதுமாக தீர்க்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. இது தொடர்பாக நடிகர் சிம்பு, படப்பிடிப்புத் தளத்தில், இயக்குநர் வெற்றி மாறனுடன் உரையாடிக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிம்பு - வெற்றி மாறன்: சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம், கடந்த ஆண்டு வெளியான தக் லைஃப். கமல்ஹாசன், த்ரிஷா உள்ளிட்டோருடன், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான படம் தான் அது. அதேபோல் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான கடைசி படம் என்றால் அது விடுதலை பாகம் 2 படம் தான். இது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications