அனுஷ்காவின் வித்தியாசமான நடிப்பில் சைலன்ஸ்.. ஏப்ரல் 2 தேதி ரிலீஸ் !

சென்னை : தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா 'சைலன்ஸ்' படத்தில், செவித்திறன், பார்வைத் திறன் குறைபாடுள்ளவராக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 2ந் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்க, மாதவன் - அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்கும் படம் தான் 'சைலன்ஸ்' இந்த படத்தை இயக்குனர் ஹேமந்த் மதுக்கர் இயக்குகிறார். 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் ஏப்ரல் 2ம் தேதி உலகமுழுவதும் வெளியாக உள்ளது.

Silence movie to be relased on April 2

பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி சார்பாக டி ஜி விஷ்வபிரசாத் மற்றும் கோனா பிலிம் கார்பரேஷன் சார்பாக கோனா வெங்கட் ஆகியோர் தயாரிப்பில், 'ஏ ஃபிளாட்', 'வஸ்தாடா நா ராஜு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹேமந்த் மதுக்கர் இப்படத்திற்கு கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மாதவன் நடிக்க, நாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு பிரம்மாண்டான வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, டிரைடன்ட் ஆர்ட்ஸ் வெளியிட உள்ளது.

இப்படம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதை. இப்படத்தில் ஒரு வாய் பேசமுடியாத ஊமைப் பெண்ணாக, காது கேளாத செவிட்டுப் பெண்ணாக, பலரது மனதையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார் அனுஷ்கா.

Silence movie to be relased on April 2

இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் வித்தியாசமாக படமாக்கியிருக்கிறார்கள். இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய கோணத்தில் எதிர்பாராத சம்பவங்கள், திருப்பங்கள் என விறுவிறுப்பான திகிலுடன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மாதவன், அனுஷ்கா ஷெட்டி ஆகியோருடன் இணைந்து, அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ'ஹேரோ ஆகியோர் நடித்துள்ளனர். ஷானில் தியோ ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் புடி படத்தொகுப்பை கவனிக்க, அலெக்ஸ் டெர்சிஃப் சண்டை காட்சிகளை அமைக்க, சாட் ராப்டர் கலை இயக்கத்திற்கும் பொறுப்பேற்று இருக்கிறார்.
இப்படத்திற்கு மணி சியான் வசனம் எழுத, காட்சிகளுக்கு ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா மெருகேற்றியிருக்கிறார். கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைக்க, பின்னணி இசைக்கு கிரீஷ் கோவிந்தன் பொறுப்பேற்று இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X