22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகிறார் சில்க்: இது ஒரிஜினல்
சென்னை: சில்க் ஸ்மிதா நடித்த கடைசி திரைப்படம் வெளியாக உள்ளது.
என்பதுகளில் வெளிவந்த பெரும்பான்மையான திரைப்படங்களில் தவிர்க்க முடியாத அழகிய சக்தியாய் வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா.

சில்க் ஸ்மிதா உதவி மேக்கப் வுமெனாக வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக நடிகையாக உயர்ந்தவர். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல, சில்க் ஸ்மிதா வாய்ப்புக்காக ஏங்கிய காலம்போய் அவர் இல்லாமல் படம் இல்லை என்ற அளவுக்கு வளர்ந்தார்.
புகழின் உச்சியில் இருந்தபோது ஏமாற்றம், துரோகம், படங்கள் தயாரித்ததால் ஏற்பட்ட பண இழப்பு போன்ற பல்வேறு காரணங்கள் அவரைத் தற்கொலைக்குத் தள்ளியதாக சொல்லப்படுகிறது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை, படமாக வந்து வரவேற்பைப் பெற்ற பிறகு, அவர் நடித்த கடைசி திரைப்படத்தை வெளியிட இப்போது திட்டமிட்டுள்ளனர்.
1995ஆம் ஆண்டு, சாதிப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் "ராக தாளங்கள்". சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகக் கூறி சென்சார் நிராகரித்ததால் ரிலிஸ் செய்யப்படவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்துவருவதாக அப்படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











