twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சில்க் ஸ்மிதாவின் கதை அடுத்து மராத்தியிலும் படமாகிறது!

    By Shankar
    |

    சென்னை: தமிழின் முன்னணி நடிகையாக இருந்து திடீரென தற்கொலை செய்துகொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை அடுத்து மராத்தியிலும் தயாராகிறது.

    சில்க் ஸ்மிதாவின் கதையை இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் படமாக்கினர்.. படமாக்குகின்றனர். அதிக மொழிகளில் வெற்றி கண்ட கதை சில்க் ஸ்மிதாவுடையதுதான்.

    தேசிய விருது

    தேசிய விருது

    இந்தியில் ‘டர்டிபிக்சர்' என்ற பெயரில் படமாக்கினர். சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யாபாலன் நடித்து இருந்தார். இதற்காக அவர் தேசிய விருது பெற்றார். வசூலும் குவிந்தது.

    மலையாளத்தில்

    மலையாளத்தில்

    மலையாளத்தில் ‘கிளைமாக்ஸ்' என்ற பெயரில் தயாரானது. அங்கு சில்க் வேடத்தில் சனாகான் நடித்தார்.

    கன்னடத்தில்

    கன்னடத்தில்

    இந்த க்ளைமாக்ஸ் படத்தை அப்படியே மொழிமாற்றம் செய்து தமிழிலும் வெளியிட்டு ஓரளவு லாபம் பார்த்தனர். கன்னடத்திலும் இப்படத்தை எடுத்தனர். அதில் வீணா மாலிக் நடித்திருந்தார்.

    மராத்தி

    மராத்தி

    தற்போது மராத்தியிலும் இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை சமீர்கான் இயக்குகிறார். அவர் கூறும் போது, ‘‘சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து பல மொழிகளில் படங்கள் வந்துள்ளது. அவை வெவ்வேறு கோணத்தில் இருந்தன.

    அனுமதி

    அனுமதி

    இந்த படம் முழுமையாக இருக்கும். சில்க் ஸ்மிதா குடும்பத்தினரை சந்தித்து இந்த படத்தை எடுப்பதற்கான அனுமதியை வாங்கி விட்டேன். சினிமாவில் சில்க் ஸ்மிதா பட்ட கஷ்டங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இருக்கும். மராத்தி முன்னணி நடிகை ஓருவர் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பார்,'' என்றார்.

    English summary
    Debutant Sameerkhan is going to make a movie on the basis of Silk Smitha life story in Marathi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X