மீண்டும் டிரெண்டாகும் சில்க் ஸ்மிதா.. சுராங்கனி பாட்டை என்னம்மா பாடுறாங்க!
சென்னை: எத்தனை கிளாமர் இளவரசிகள் வந்தாலும் குயின் என்றுமே சில்க் ஸ்மிதா தான் என இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிகழ்ச்சி ஒன்றில் மலேசியா வாசுதேவன் உடன் இணைந்து சில்க் ஸ்மிதா சுராங்கனி பாடலுக்கு தனது ஸ்டைலில் பாடும் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.
சில்க் ஸ்மிதாவின் அழகை ரசிகர்கள் வர்ணித்து கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.

மீண்டும் சில்க்
சில்க் ஸ்மிதா மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் மக்கள் மனங்களில் இருந்து அவர் மறையவில்லை. சில்க் போலவே இருக்கிறார் என ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் சில ஆண்டுகளுக்கு முன்னர் டிரெண்டானார். இந்நிலையில், சில்க் ஸ்மிதாவின் பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

சுராங்கனி பாடிய சில்க்
சில்க் ஸ்மிதா சினிமாவில் பேசியது, நடித்தது, நடனமாடியது மட்டுமே ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு களித்து இருப்பார்கள். இந்நிலையில், ஸ்டேஜ் ஒன்றில் சில்க் ஸ்மிதா சுராங்கனி பாடலை பாடி அசத்தும் வீடியோ ஒன்று தற்போது டிவிட்டரில் ஷேர் செய்யப்பட்டு தீயாக பரவி வருகிறது.
மலேசியா வாசுதேவன் உடன்
துள்ளல் பாடலுக்கு பெயர் போன மலேசியா வாசுதேவன் உடன் மேடையை ஷேர் செய்து கொண்டு கவர்ந்திழுக்கும் காந்த கண்களுடன் கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டுக் கொண்டே சில்க் ஸ்மிதா தனது ஸ்டைலில் பாடும் அந்த சுராங்கனி பாடல் வீடியோ சில்க் ஸ்மிதா ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கிளப்பி உள்ளது.

இன்னும் இருக்கா
இந்த வீடியோவில் சில்க் ஸ்மிதாவை பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்னும் இது போல வீடியோக்கள் இருக்கா? இருந்தா கொஞ்சம் ஷேர் பண்ணுங்களேன் என இப்போதும் சில்க்கை பார்க்க ஏங்கிப் போய் நிற்பது அவர் மறைந்தாலும் அவரது கிரேஸ் மற்றும் ஆளுமை எப்போதும் மறையாது என்பதற்கு ஒரு சான்றாகவே உள்ளது.

35 வயதில் முடிந்த சகாப்தம்
17 ஆண்டுகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்திய சினிமாவே ஆச்சர்யப்படும் அளவுக்கு கொடிகட்டி பறந்த சில்க் ஸ்மிதா. 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தனது 35வது வயதில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











