சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படம் மின்மினி.. மனம் திறந்தார் ஹலிதா ஷமீம் !

சென்னை : சில்லுக்கருப்பட்டி இயக்குனரின் அடுத்த படமான மின்மினி குறித்து மனம் திறந்து கூறுகிறார் ஹலிதா ஷமீம்.

திரைதுறையை பொறுத்த வரை நடிகர்களில் ஆண்களும் பெண்களும் அவர்களின் திறமைக்கேற்ப பெயர் பெற்று நிலைத்தும் நிற்கின்றனர். ஆனால் இயக்குனர்கள் அப்படி இல்லை, ஆண் இயக்குனர்களை விட இங்கு பெண் இயக்குனர்கள் நிலைத்து இருப்பது மிகக்குறைவே. அதே சமயம் அதை சுட்டி காட்டி பேசினாலும் பலருக்கு பிடிப்பதில்லை.

"பூவரசம் பீப்பீ" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஹலிதா ஷமீம். இந்த படம் அனைவரிடமும் விமர்சன ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்றார். இருந்தாலும் வணீக ரீதியாக வெற்றி என்று சொல்ல முடியாது . பின் நீண்ட இடைவெளிக்கு பின் சில்லுக்கருப்பட்டி என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கினார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை வெளியிட்டது.

தொடர் முயற்சி

தொடர் முயற்சி

சில்லுக்கருப்பட்டி படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள படம் மின்மினி. இந்த படத்தின் வேலைகள் முற்றிலும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. YNOT ஸ்டூடியோ & ரிலையன்ஸ் என்டர்டைன்மெண்ட் வெளியிடுகிறது . தொடர் முயற்சி செய்து அடுத்த படைப்புகளின் வேலைப்பாடுகளையும் செய்து வருகிறார்

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

கடந்த ஆண்டு வெளியான இந்தப்படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பான விமர்சனங்களை பெற்று வந்தது. தமிழ் மட்டுமல்லாமல் வேறு மொழியினத்தவரும் இந்த படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி வந்தனர். நான்கு வித்தியாசமான கதைகளை கொண்ட இந்த ஆந்தாலஜி படத்தில் சமுத்திரகனி, சுனைனா, மணிகண்டன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வெளியிட்ட இப்படம் சிறந்த விமர்சனங்களுடன் மிகப்பெரிய வெற்றியையும் பெற்று தந்தது.

வெளிச்சம்

வெளிச்சம்

தனது கனவு திரைப்படமான மின்மினியை பற்றி ஹலிதா ஷமீம் தனது ட்விட்டரில் கூறியதாவது, இப்படத்தில், புதுமுகங்களைத் தவிர ‘பாபநாசம்' படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்த எஸ்தர் அனில் இதில் நடிக்கிறார். மேலும் பேசிய அவர் "சர்வைவரின் குற்றம் எவ்வளவு உண்மையானது? உங்கள் அன்புக்குரியவர்களின் கனவுகளை வாழ வைக்க எவ்வளவு தூரம் நீங்கள் செல்வீர்கள்? அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையில் உள்ள மெல்லிய கோடு எத்தகையது ? பெரியவர்களை விட சிறு வயதினர்கள் ஏன் அதிக உணர்ச்சிவசப்படுகிறார்கள்? மின்மினி ஒரு அமைதியான மேகம், அது என் மீது இறங்கியது, அதற்கு நியாயம் செய்ய நான் இந்த ஆண்டுகளில் உழைத்து வருகிறேன்" என சில சுவாரஸ்யமான புகைப்படங்களையும் அப்படத்திலிருந்து பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Angel Messaged | Sillu Karuppatti Halitha Flooded with love
கொண்டாட வேண்டும்

கொண்டாட வேண்டும்

இதில் நடித்த சிறுவர்கள் பூவரசம் பீப்பீயில் நடித்தவர்கள் என கூடுதல் தகவலையும் தந்துள்ளார். பல ஆண்டுகள் கொண்ட கனவு மின்மினி , பல பல முயற்சிகள் செய்து எடுக்கப்பட்ட காட்சிகள். விரைவில் திரையில் காண பல ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர். பெரும்பான்மையான ஆண்கள் மட்டுமே இயக்குனர்கள் துறையில் சாதித்து வரும் இந்த காலகட்டத்தில் ஹலிதா ஷமீம் போன்ற திறமையான பெண் இயக்குனர்களையும் தேடி கண்டுபிடித்து கொண்டாட வேண்டியது நம் பொறுப்பாகும் என்று இயக்குனர்கள் பலர் சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X