சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் “சில்லுக்கருப்பட்டி”

சென்னை : "சில்லுக்கருப்பட்டி" இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளளது.

கடந்த சில வருடங்களாக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அப்படத்தின் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது.

 Sillu karuppatti bought by Suriyas 2D Entertainment Company

டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனத்தை ஈர்த்த படம் "சில்லுக்கருப்பட்டி"இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. மேலும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிறந்த வெளியீடாக உருவாகியுள்ள சிக்னேச்சர் வெளியீடாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

 Sillu karuppatti bought by Suriyas 2D Entertainment Company

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கமர்ஷியல் படங்களை மட்டும் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல திரைப்பட முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. தரமான நல்ல கருத்துள்ள படங்களை தொடர்ந்து தயாரித்தும் அவற்றை வாங்கி வெளியிட்டும் தங்களது ஆதரவை தொடர்ந்து தந்து வருகிறது.

 Sillu karuppatti bought by Suriyas 2D Entertainment Company

அந்த வகையில் இயக்குநர் ஹலிதா சமீம் இயக்கியுள்ள "சில்லுக்கருப்பட்டி" படத்தின் மீதான உரிமையை பெற்றுள்ளது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சிக்னேச்சர் வெளியீடு என்பது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படங்களை மட்டும், மிக கவனமுடன் தேர்ந்தெடுத்து, பெருமளவு ரசிகர்களுக்கு, பிரத்யேகமாக இந்த அடையாளத்துடன் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி ஆகும். இந்த அடையாளத்துடன் வெளியாகும் முதல் திரைப்படம் "சில்லுக்கருப்பட்டி" என்பது குறிப்பிடத்தக்கது.

 Sillu karuppatti bought by Suriyas 2D Entertainment Company

இத்திரைப்படத்தை மிகச்சரியான தேதியில் மிகப்பிரமாண்ட வெளியீடாக வெளியிட திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம் என்கிறார் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிர்வாகி சக்திவேலன்.

 Sillu karuppatti bought by Suriyas 2D Entertainment Company

மேலும் இப்படத்தில் இயக்குநர் ஹலிதா சமீம் கூறும்போது, "சில்லுக்கருப்பட்டிபடத்தினை பார்த்தவுடன் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மனதார எங்களது குழுவை பாராட்டினார்கள். மேலும் உடனடியாக இப்படத்தின் உரிமையை வாங்குவதாக அறிவித்தார்கள் இதை விட மகிழ்ச்சி வேறு என்ன என்று கூறினார்.

"சில்லுக்கருப்பட்டி" நகரப் பின்னணி கொண்ட நான்கு அழகான குறுங்கதைகளை கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X