கிராமத்து கதையை இயக்குகிறார்... 'சில்லுக்கருப்பட்டி' டைரக்டரின் அடுத்த பட டைட்டில் 'ஏலே'!
சென்னை: 'சில்லுக்கருப்பட்டி' படத்தை இயக்கிய ஹலிதா ஷமிம், தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. 4 வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய ஆந்தாலஜி வகை படம் இது.
இதில் சமுத்திரக்கனி, சுனேனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், பேபி சாரா உட்பட பலர் நடித்திருந்தனர்.

அடுத்த படம்
ஹலிதா ஷமிம் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே பூவரசம் பீப்பி படத்தை இயக்கி இருந்தார். சில்லுக்கருப்பட்டி படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து கவனிக்கத்தக்க இயக்குனர் ஆனார் ஹலிதா ஷமீம். இவரது அடுத்த படம் என்னவென்று கேள்வி எழுந்தது. இதுபற்றி அவரிடம் பலர் கேட்டு வந்தனர்.

போஸ்டர்
இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளார். 'என் அடுத்தப்படம் பற்றி பலர் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் அடுத்த பட போஸ்டர். ஏலே-தான் என் அடுத்தப்படம். விரைவில் ரெடியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
யதார்த்த சினிமா
சுவரில் சாத்தப்பட்டிருக்கும் சைக்கிள், பின் கேரியரில் ஐஸ்பெட்டி, ஒரு ஜன்னல் என கிராமத்தை ஞாபகப்படுத்தும் அந்த போஸ்டரில் சைக்கிள் டயரில் ஏலேய் என்ற எழுத்து உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் யதார்த்த சினிமாவை எடுக்க இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர்
இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட், வால்வாச்சர் பிலிம்ஸுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கபேர் வாசுகி இசை அமைத்துள்ளார். படம் பற்றிய வேறு தகவல்களை இப்போது தெரிவிக்க இயக்குனர் ஹலிதா ஷமிம் மறுத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











