சில்லுக் கருப்பட்டி ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை: சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் சில்லுக்கருப்பட்டி. இந்தப் படத்தை ஹலிதா ஷமீம் எழுதி இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் சமுத்திரகனி, சுனைனா, நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீ ராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

நான்கு கதைகளின் தொகுப்பு
நான்கு வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் 2018 ஆம் ஆண்டே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் படம் ரிலீசானது.

திடீர் மரணம்..
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தப் படத்தில் வயதான தாத்தாவாக நடித்திருந்த ஸ்ரீராம் இன்று எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

மாடியில் இருந்து விழுந்து..
தற்காப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்தார். தமிழக காவல் துறையில் Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீராம்.

முதுமையிலும் காதல் வரும்
ஸ்ரீராமின் மறைவு திரைத்துறையினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில்லுக்கருப்பட்டி படத்தில் வயதானாலும் காதல் வரும் என்ற கதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











