நான் ஒரு குயின்.. கிரீடத்துடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்த சில்லுனு ஒரு காதல் குட்டி பாப்பா!
மும்பை : சூர்யா, ஜோதிகாவின் நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் ஸ்ரேயா ஷர்மா .
தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹீரோயினாகவும் இவர் அறிமுகமாகியுள்ளார்.
நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா ஷர்மா இப்பொழுது தலையில் கிரீடத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

குழந்தை நட்சத்திரம்
சில கதாபாத்திரங்கள் என்றுமே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அந்த வகையில் சூர்யா, ஜோதிகா, பூமிகா, சந்தானம் ஆகியோரின் நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் பலரது ஃபேவரிட் படமாக இன்றும் உள்ளது. இதில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் நடிப்பையும் தாண்டி குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் நடிப்பு பலரையும் ஈர்த்தது.

சில்லுனு ஒரு காதல்
தெலுங்கு,ஹிந்தி,தமிழ் என பல மொழிகளில் நடித்து உள்ள ஸ்ரேயா ஷர்மா தமிழில் சில்லுனு ஒரு காதல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகபடுத்த பட்டதைத் தொடர்ந்து எந்திரன் மற்றும் நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்வார்.

படிப்பில் கவனம்
தெலுங்கில் வெளியான நிர்மலா கான்வென்ட் மூலம் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த ஸ்ரேயா ஷர்மா தற்பொழுது எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என சொல்லப்படுகிறது.
Recommended Video

நீங்க ஒரு குயின்
ஹீரோயினாக சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை திரையில் காண ஆவலுடன் இருக்க சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இப்பொழுது தலையில் கிரீடம் ஒன்றை வைத்துக் கொண்டு வாய் நிறைய புன்னகையுடன் கொள்ளை அழகில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசித்த ரசிகர்கள் நீங்க ஒரு குயின் என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications