Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வெள்ளி டாலர்!
திருப்பூர்: கோச்சடையான் வெளியாகும் நாளில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினி படம் பொறித்த வெள்ளி டாலர் வழங்கப்படும் என திருப்பூர் ரஜினி ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு ரஜினிகாந்த் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் எஸ்.எஸ்.முருகேஷ் தலைமையில் ஆர்.வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் காந்தி வேடம், ரஜினி வேடம் அணிந்து மேடையில் தொண்டர்கள் தோன்றினர். 200க்கும் மேற்பட்டவர்கள் முகத்தில் கோச்சடையான் ரஜினியின் மாஸ்க் அணிந்திருந்தனர்.
கூட்டத்தில் கோச்சடையான் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் பிரமாண்டமான ரதம் தயாரித்து அதை தமிழகம் முழுவதும் பவனி வரச் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திரைப்படம் வெளிவரும் அன்று திருப்பூர் அரசு மருத்துவ மனையில் பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளுக்கு ரஜினிகாந்த் படம் பொறித்த வெள்ளி டாலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டது.
கோச்சடையான் திருட்டு சி.டி வெளிவராமல் தடுக்க ஆண், பெண் கொண்ட சிறப்பு குழுவை திருப்பூர் மாவட்டம் முழுவதும் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.