கௌதம் கார்த்திக்கை நான் வெகுவாக ரசித்தேன்.. பத்து தல சிம்பு ஓபன் டாக்
சென்னை: கௌதம் கார்த்திக் செய்த ஆக்ஷன் காட்சிகளை வெகுவாக ரசித்ததாக பத்து தல பத்திரிகையாலர் சந்திப்பில் சிம்பு பேசியிருக்கிறார்.
மாநாடு படம் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு அந்தப் படத்தில் பழைய சிம்புவாக திரும்பி வந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர். இனி எஸ்டிஆரை யாரும் அடித்துக்கொள்ள முடியாது எனவும் கூறிவருகின்றனர்.

மூன்றாவது படமாக பத்து தல
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்பு பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியிருக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படமானது மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

கவனம் ஈர்த்த பத்து தல ட்ரெய்லர்
பத்து தல படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிம்பு, ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தில் சிம்பு கேஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பத்து தால் ட்ரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படத்துக்கான ப்ரோமோஷன்
படத்தின் ட்ரெய்லரும், இசையும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. படம் ரிலீஸாக இன்னும் 6 நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்தவகையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பங்குக்கு பல பேட்டிகளை கொடுத்துவருகிறார். தனது பேட்டிகளில் சிம்பு குறித்தும் ஏகத்துக்கும் புகழ்ந்துவருகிறார்.

பத்து தல படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு
இந்நிலையில் பத்து தல படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது கௌதம் கார்த்திக் குறித்து பேசிய சிம்பு, "கௌதம் கார்த்திக்கிடம் எனக்கு பிடித்த விஷயம் என்றால் அது ஆக்ஷன். ஆக்ஷன் செய்யும்போது இவரெல்லாம் ஏன் அதை செய்கிறார் என்று யோசிப்போம். அந்த யோசனை கௌதம் கார்த்திக்கை பார்த்தால் எழாது.

அப்படி பண்ணுவது ரொம்ப கஷ்டம்
ஒரு ஹீரோ ஆக்ஷன் செய்து மக்களை என்ட்டெர்டெயின்மெண்ட் செய்வது ரொம்பவும் கஷ்டமான விஷயம். ஆனால் அதை ரொம்ப ரொம்ப சாதாரணமாக கௌதம் கார்த்திக் செய்துகொண்டிருக்கிறார். பத்து தல படத்தில் அதை நான் கூட இருந்து பார்த்தேன். உண்மையிலேயே அதை நான் மிகவும் ரசித்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications