நடிகர் சங்க தேர்தலில் சிம்பு, பிரஷாந்த்!
நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகர்கள் சிலம்பரசன், பிரஷாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.அதேசமயம், முன்னணி நடிகரான விஜய் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
வருகிற 30ம் தேதி நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிநடந்து வருகிறது. இதில் தலைவர் பதவிக்கு சரத்குமார் போட்டியிடவுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு நடிகர்விஜயக்குமார் போட்டியிடுகிறார்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனோரமா, ஸ்ரீபிரியா, செந்தில், முரளி, அப்பாஸ், சார்லி ஆகியோர்போட்டியிடுகிறார்கள். இவர்கள் தவிர நடிகைகள் மும்தாஜும், விந்தியாவும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.தற்போது இளம் நடிகர்கள் சிம்புவும், பிரஷாந்த்தும் கூட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இளம் நடிகர்களான சிம்புவும், பிரஷாந்த்தும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது திரையுலக வட்டாரத்தில் புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் முன்னணி நடிகர்கள் யாரும சங்க நடவடிக்கைகளில் அக்கறைகாட்டுவதில்லை என்ற புகாரைக் களையும் விதமாக இவர்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நாளையுடன் வேட்பு மனு தாக்கல் முடிகிறது. போட்டி இருந்தால் 30 ம் தேதி நடிகர், நடிகையர் ஓட்டுப் போட்டுநிர்வாகிகளைத் தேர்வு செய்வர்.


Click it and Unblock the Notifications