கமல் கூட்டணியில் சிம்பு.. சம்பளம் குறைவாக இருந்தாலும் ஓகே.. சிம்புவின் மாஸ்டர் பிளான்!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கவுள்ளார். இதனால், சிம்புவின் ரகிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாநாடு, வெந்துதணிந்தது காடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் ஏகத்திற்கும் எகிற உள்ளது.
சிம்பு கேங்ஸ்டாராக நடிக்கும் பத்து தல திரைப்படம் மார்ச் 30ந் தேதி வெளியா உள்ளது.

சிம்புவின் பத்து தல
2017ம் ஆண்டு கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற மஃப்டி திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி உள்ள ஸ்டுடியோ கிரின் ஞானவேல் ராஜா சிம்பு, கௌதம் கார்த்தியை வைத்து பத்து தல என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. சிம்பு வெளிநாட்டில் இருப்பதால்,இந்த படத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

சிம்பு 48
இந்நிலையில், சிம்புவின் 48 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி சிம்புவின் அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கமல் கூட்டணியில் சிம்பு
கமலுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து இயக்குநர் தேசிங்கு பெரியசா தனது ட்விட்டர் பக்கத்தில். என் வாழ்க்கையின் நிகழ்ந்துள்ள கற்பனைக்கு எட்டாத அற்புதங்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். உலக நாயகனுக்கு கதை சொல்லும் பாக்கியம் கிடைத்துள்ளது, என் கனவு நனவானது அற்புதங்கள் நிகழ்கின்றன என பதிவிட்டுள்ளார்.

ரூ 100 கோடி பட்ஜெட்டில்
சிம்புவின் 48வது படத்தை பிரம்மாண்டமாக, அதிக பொருட் செலவில், சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க ராஜ் கமல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் தேசிங்கு பெரியசாமி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்காக தயார் செய்த கதை இது என்றும், ரஜினி நடிக்க முடியாமல் போனதால், சிம்புவை வைத்து அப்படத்தை எடுக்க தேசிங்கு பெரியசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிம்புவின் பிளான்
மாநாடு, வெந்துதணிந்தது காடு போன்ற படத்தின் அதிரடியான வெற்றியால், சிம்புவின் சம்பளம் கணிசமாக உயர்ந்த நிலையில், தற்போது கமல் தயாரிக்கும் படத்தில் சிம்பு தனது சம்பளத்தை கணிசமாக குறைந்துக் கொண்டுள்ளார். இப்படம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால், பெரிய அளவில் மார்க்கெட் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பக்காவாக பிளான்போட்டு தனது சம்பளத்தை குறைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











