அட இது தெரியாம போச்சே! சிம்பு, சுதா கொங்கரா படம் ட்ராப் ஆக யார் காரணம்? வெளிவந்த உண்மை!
சென்னை: தமிழ் சினிமாவில் அதிக விமர்சனங்களுக்கு ஆளான ஒரு நடிகர் என்றால் அது சிம்புதான். இவர்மீது வைக்கப்படாத குற்றச்சாட்டுகளோ அல்லது விமர்சனங்களோ இல்லை எனும் அளவிற்கு சிம்பு குறித்த விமர்சன கிசுகிசுக்களும் செய்திகளும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கொட்டிக் கிடக்கின்றது. சிம்பு நல்லது செய்ய நினைத்து ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலே அதனை தொடர்ந்து மோசமாக விமர்சிக்கும் நபர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கின்றனர்.
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான டி.ராஜேந்திரனின் மூத்த மகனான சிம்பு என்கின்ற சிலம்பரசன் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகின்றார். கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிம்பு, அதன்பின்னர் இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் கால் பதித்துள்ளார்.

இவரும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்தால் அந்த படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் எனக் கூறும் அளவிற்கு இவர்கள் கூட்டணி இருந்தது. காதல் கதைகளில் மட்டும் இல்லாமல் அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கும் படங்களைத் தேர்வு செய்து வந்த சிம்பு இனி ஆக்ஷன் படங்களில் மட்டும்தான் நடிப்பார் என பேச்சு வந்தபோது விண்ணைத் தாண்டி வருவாயா எனும் எவர் க்ரீன் லவ் ஸ்டோரியில் நடித்து மிரட்டிவிட்டார்.
கம்பேக்: அதன் பின்னர், படங்களில் நடிப்பதைக் குறைத்து வந்த சிம்பு தனது உடலின் மீது பெரிதாக அக்கறை செலுத்தாமல், இருந்ததால் 100 கிலோவுக்கும் மேல் எடை போட்டார். இதனால் செக்கச் சிவந்த வானம் படத்தின் ஓடி ச்சேஸ் செய்யவேண்டிய காட்சிகளில் சிம்பு நடிக்கவே திணறியதாக அவரே கூறியுள்ளார். அதன் பின்னர் முழுக்க முழுக்க உடல்நிலையில் அக்கறை செலுத்திய பின்னர்தான் படத்தில் நடிக்க வேண்டும் எனும் நோக்கில் உடலைக் குறைத்து ஈஸ்வரன் மற்றும் மாநாடு படத்தில் திரும்ப வந்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். இதில் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

50வது படம்: அதன் பின்னர் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல ஆகிய படங்களில் நடித்த சிம்பு, தற்போது மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்து வருகின்றார். மேலும் கமல் ஹாசனின் ராஜ் கமல் புரெடக்ஷனில் தனது 49வது படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த இருபடங்களை முடித்துவிட்டு, சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு தனது 50வது படத்தில் நடிக்க கதை கேட்டு ஒப்புக் கொண்டார். இந்த படத்தை கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிக்கவும் முன்வந்தது.

படம் டிராப்பா? ஆனால் இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட் படமான சலார் படத்தின் முதல் பாகம் படு தோல்வியைச் சந்தித்ததால் சிம்பு படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கியுள்ளது. ஆனால் சிம்புவும் சுதாவும் இணைந்து தாங்கள் ஏற்கனவே கமிட்டான படத்தை வேறு யாராவது தயாரிப்பாளரை வைத்து எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் இந்த விஷயம் தெரியாத பலர் இந்த படம் குறித்த தவறான தகவலை அதாவது, சிம்பு கதைக் கேட்கச் செல்லாமல் தூங்கிவிட்டார் என பொய்யைக் கிளப்பிவிட்டிருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











