முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் நடிக்கும் சிம்பு: அவர் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலயே!

By Siva

சென்னை: ஹன்சிகா நடித்து வரும் மஹா படத்தில் சிம்பு கவுரவத் தோற்றத்தில் வருகிறாராம்.

ஹன்சிகாவின் 50வது படம் மஹா. ஜமீல் இயக்கி வரும் இந்த படத்தின் போஸ்டர்கள் சர்ச்சையில் சிக்கின. ஹன்சிகா புகைப்பிடித்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

படம் பார்த்தால் எல்லாம் புரியும் என்று கூறிவிட்டு வேலையை பார்க்கிறது படக்குழு.

 சிம்பு

சிம்பு

மஹா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்குமாறு இயக்குநர் ஜமீல் சிம்புவிடம் கேட்க அவர் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாராம். சிம்புவும், ஹன்சிகாவும் ஒரு காலத்தில் காதலித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்ஷீட்

கால்ஷீட்

வாலு படத்தை அடுத்து 4 ஆண்டுகள் கழித்து சிம்புவும், ஹன்சிகாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். மஹா படத்திற்கு 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் சிம்பு. முன்னதாக வாலு படத்தில் நடித்தபோது தான் சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது.

 இஸ்தான்புல்

இஸ்தான்புல்

மஹா படத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் பெயர் சோயப் ஆகும். அவர் பிளாஷ்பேக் காட்சிகளில் வருவாராம். தற்போது லண்டனில் இருக்கும் சிம்பு மஹா படப்பிடிப்புக்காக இஸ்தான்புல் செல்கிறாராம்.

வம்பு

வம்பு

மஹா படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறாராம் சிம்பு. ஏற்கனவே வம்பில் சிக்கியுள்ள மஹா படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். முன்னாள் காதலியான நயன்தாராவை அடுத்து ஹன்சிகாவுடன் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X