ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிக்கும் சிம்பு?
சென்னை: வாலு விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகும் படம் தெலுங்குப் படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் பல்வேறு பிரச்சினைகளுக்குப் பின் வெளியான படம் வாலு.
பிரச்சினைகளுடன் வெளியானாலும் கூட இப்படம் சுமாராக ஓடியது. இந்நிலையில் மீண்டும் விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போகிறார் சிம்பு. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான டெம்பர் படத்தின் ரீமேக்காக இப்படம் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்-காஜல் அகர்வால் நடிப்பில் ஹிட்டடித்த படம் தான் இந்த டெம்பர்.
இதைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி எடுக்கவிருக்கிறார்களாம் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் நடிப்பில் உருவான கான் இடையில் நின்றுபோனாலும் கூட அவரின் கைவசம் தற்போது அச்சம் என்பது மடமையடா, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படம் ஆகியவை உள்ளன.
மேலும் சிம்புவின் நடிப்பில் உருவான இது நம்ம ஆளு படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











