"கூடவே இருந்த நீயே இப்படி பண்ணிட்டியே..." - சிம்பு - ஆதிக் போன் உரையாடல்!
Recommended Video

சென்னை : தமிழ் சினிமாவில் சர்ச்சைகளை அடிக்கடி சந்திப்பவர் நடிகர் சிம்பு. சமீபகாலமாக இவரைப் பற்றிய தவறான தகவல்கள் அதிகமாக வந்துகொண்டிருக்கின்றன.
கடைசியாக 'AAA' பட தயாரிப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய சிம்பு இனி நடிக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
இந்நிலையில், 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சிம்பு போனில் பேசிய ஆடியோ லீக் ஆகி இருக்கிறது.

தயாரிப்பாளர் புகார்
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் பெரும் தோல்வியடைந்ததால், சிம்புவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்தார். மேலும், சிம்புவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இயக்குநர் குற்றச்சாட்டு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் சிம்புவை குற்றம் சாட்டினார். "சிம்பு பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். ஆனால், அவரோடு பணிபுரிவது தான் கஷ்டம். 'AAA' படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எங்களுடைய கட்டுப்பாட்டில் படம் இல்லை. "எனக்கு உன்னை விட அனுபவம் அதிகம், இப்படி செய்தால்தான் சரியாக வரும்" என்று சிம்பு கூறும்போது எதிர்த்துப் பேசினால், அப்போது படப்பிடிப்பே நடக்காது.": எனத் தெரிவித்தார்.

மன்னிப்பு கேட்ட சிம்பு
சிம்பு விவகாரம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது, சிம்புவின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் குரல் கொடுத்தனர். இந்த சர்ச்சையால் நடிகர் சிம்பு 'படம் ஓடாததற்கு நான் தான் காரணம்' எனக் கூறி மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார்.

மணிரத்னம் படத்தில்
சிம்பு தற்போது ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரித்து வருகிறார். அந்தப் படத்தின் படம்பிடிக்கும் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

சிம்பு - ஆதிக் உரையாடல்
இந்த நிலையில், 'AAA' படத்தின் தோல்விக்கு குற்றம் சாட்டியது குறித்து சிம்பு, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இந்த ஆடியோவில், சிம்பு இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் மிகவும் வருத்தப்பட்டு தனது நிலையை எடுத்துக் கூறியுள்ளதாக பதிவாகியுள்ளது.

வருத்தப்பட்ட சிம்பு
இந்த ஆடியோவில் ஆதிக் மீது பரிவு கொண்டவராக பேசியிருக்கிறார் சிம்பு. "கூடவே இருந்த நீயே இப்படிப் பேசினது வருத்தமாக இருக்கு. வேற யார் சொல்லி இருந்தாலும் அது எனக்கு பெரிய பிரச்னை இல்லை. உனக்காக தான் நான் தப்பு பண்ணேன்னு மன்னிப்பு கேட்டேன்" எனக் கூறியுள்ளார்.

நீயே இப்படி பேசலாமா?
"பாத்ரூம்ல உட்கார்ந்து டப்பிங் பேசுனேன்.. ஸ்கிரிப்ட்டை வாங்கினேன்னுலாம் சொல்லியிருக்கீங்க.. யார் என்ன சொன்னாலும் என்னைப் பத்தி தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா..? என வருத்தப்பட்டுள்ளார். கடைசியில் சிம்புவே, "பிரச்னையை விடு, நீ இப்படி பண்ணினது எனக்கு கஷ்டமாக இருக்கு" என்று கூறி முடித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











